ஐஸ்க்ரீம்,குளிர்ந்த உணவு அல்லது குளிர் பானங்கள் சாப்பிட்டால் தலைவலி வரும்.காரணம்:குளிர்ந்த பொருட்கள் வாயை அதி விரைவில் குளிர்ச்சி அடையச் செய்து விடுகிறது.அதனால் தலையிலிருந்து அனுப்பப்படும் மித வெப்ப இரத்தம் உடனடியாகக் குளிர்ந்து விடுகிறது.குளிர்ந்த இரத்தத்தை வலுக் கட்டாயமாகத்தான் தலை மீண்டும் இழுக்க வேண்டியுள்ளது.இதனால் நரம்புகள் தளர்வடைந்து வலிக்கான அறிகுறியை ஏற்படுத்துகின்றன.எனவே எவ்வளவு குறைவாகவும்,மெதுவாகவும் ஐஸ்க்ரீமை சாப்பிட முடியுமோ,அப்படி சாப்பிட்டால் தலைவலியைத் தவிர்க்கலாம்.
********
கண் சிமிட்டுங்கள்
புத்தகம் படிக்கும்போது நிமிடத்திற்குப் பத்து முறையும், கம்ப்யூட்டர்
திரையில் படிக்கும் போது நிமிடத்திற்கு ஏழு முறையும் என்று குறைந்த அளவில்தான் நாம் கண் சிமிட்டுகிறோம்.இதனால் கண்களிலுள்ள ஈரப்பசை வெகு விரைவில் ஆவியாகி கண்கள் கஷ்டப்படுகின்றன.இதைத் தடுக்க அவ்வப்போது சிறிது நரம் கண்களை மூடி வைத்திருங்கள்.கண்களில் ஈரப் பசை பரவி விடும்.கண்களை அடிக்கடி சிமிட்டிக் கொள்ள மறவாதீர்!
********
|
|
nalla thakaval!