100 க்குள் 5 ல் முடியும் ஒரு எண்ணின் வர்க்கத்தைக் கண்டு பிடிக்க ஒரு எளிய வழி.:
உதாரணமாக 75 ன் வர்க்கத்தைக் கண்டு பிடிப்போம்.இந்த எண்ணின் முதல் எண்ணை எடுத்து அதாவது 7 ,அதனை அதனுடன் ஒன்று கூட்டி வரும் எண்ணால் அதாவது 8 ஆல் பெருக்கிக் கொள்ள வேண்டும்.ஆக 7x(7+1)=7x8=56.
இந்த எண்ணை எழுதிக் கொண்டு அதனருகில் 25ஐ சேர்த்தால் விடை கிடைக்கும்.அதாவது 5625
இன்னொரு உதாரணம்: 35என்ற எண்ணின் வர்க்கம் காண்போம்.
முதல் எண்=3
அதனுடன் ஒன்று கூட்ட வருவது =4
இரண்டையும் பெருக்க =3x4=12
இந்த என்னுடன் 25 சேர்த்து எழுத =1225
35x35=1225.
|
|
Post a Comment