நூறு வயதான பெண்மணி ஒருவர் இறந்துவிட்டார்.உறவினர்கள் கூடி விட்டனர்.அவர் எழுதி வைத்திருந்த உயில் எடுத்து வாசிக்கப்பட்டது.அந்தப் பெண்ணின் படுக்கை அறையில் இருந்த பெரிய மரப்பெட்டி அதுவரை அவரைக் கவனித்து வந்த டாக்டருக்கு உரித்தாகும் என்று அந்த அம்மையார் உயிலில் குறிப்பிட்டிருந்தார்.டாக்டருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. டாக்டரும் மிக்க மகிழ்ச்சியுடன் வந்து சேர்ந்தார்.எல்லோர் முன்னிலையிலும் பெட்டி திறக்கப்பட்டது.பெட்டிக்குள் .......
இத்தனை ஆண்டுகளாக டாக்டர் அந்தப் பெண்ணுக்கு எழுதிக் கொடுத்த அத்தனை மருந்துச் சீட்டுகளும் வாங்கப்பட்ட மருந்து மாத்திரைகளும் முழுமையாக பத்திரமாக இருந்தன.
|
|
Post a Comment