இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மன் போர் விமானங்கள் மாஸ்கோ நகரத்தின் மீது அடிக்கடி குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தன.போர் விமானங்கள் வரும் சப்தம் கேட்டவுடன் மக்கள் எல்லோரும் அருகில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு ஓடிப் பதுங்கிக் கொள்வர்.ஒரே ஒருவர் மட்டும் இருப்பிடத்தை விட்டு அசைவதில்லை.அவர்தான் ஒரு புள்ளியியல் துறை (statistics)பேராசிரியர்.''உங்களுக்கு அவ்வளவு தைரியமா?''என்று மக்கள் கேட்டனர்.அவர் சொன்னார்,''மாஸ்கோவில் ஏழு மில்லியன் மக்கள் இருக்கிறார்கள்.அந்த ஏழு மில்லியன் மக்களில் ஒருவரான என்மீது குண்டு விழும் வாய்ப்பு மிகக் குறைவு.இது புள்ளியியலின் தத்துவம்.(theory of probability)''ஒரு நாள் போர் விமானங்கள் வந்தபோது அதிசயமாக எல்லோருக்கும் முன் அவர் வேகமாக ஓடி வந்து ஒளிந்து கொண்டார்.மக்கள் அவரிடம்,''என்ன பயந்துவிட்டீர்களா? என்ன ஆயிற்று உங்கள் தத்துவம்?''என்று கிண்டலாய்க் கேட்டனர்.அப்போது கூட அவர் விட்டுக் கொடுக்காமல் சொன்னார்,''இல்லை,இந்த குண்டுகள் புள்ளியியல் தத்துவத்தைப் பின் பற்றுவதில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.நேற்று மாஸ்கோவில் ஏழு மில்லியன் மக்களும் ஒரு யானையும் இருந்தார்கள்.ஆனால் நேற்று இரவு நடந்த விமானத் தாக்குதலில் அந்த ஒரே ஒரு யானை இறந்துவிட்டது.மக்கள் யாரும் இறக்கவில்லை.''
|
|
Post a Comment