ஆசிரியர்:ஏண்டா கோபு,உன் கண்ணாடியை நான் வரும்போது மட்டும் போட்டுக் கொள்கிறாய்,மற்ற நேரம் போடுவதில்லையே.ஏன்?
கோபு :தலைவலி வரும்போது மட்டும் போட்டால் போதும் என்று டாக்டர் சொல்லியிருக்கிறார்,சார்.
********
ஒருவர்:இரண்டு தாரம் மணம் புரிந்தால் என்ன தண்டனை கிடைக்கும்?
மற்றவர்:இரண்டு மாமியார்.
********
''தம்பி,உன் பெயர் என்ன?''
'மை நேம் இஸ் பூரண சந்திரன்.'
''நான் தமிழில் கேட்டால்,உன் பெயரை தமிழில்தானே சொல்ல வேண்டும்?''
'சரி,என் பெயர் முழு நிலவு.'
********
காவல் நிலையத்துக்கு ஒருவர் திருட்டு சம்பந்தமாக புகார் கொடுக்க வந்திருந்தார்.ஏதோ பிரச்சினையில் இருந்த காவலர்,''எனையா காலங்கார்த்தால பல்லுக் கூட விளக்காம புகார் கொடுக்க வந்திட்டயா ?''என்று கேட்டார்.வந்தவர் சொன்னார்,''வேறு வழியில்லை,சார்.திருட வந்தவன் என் டுத் பிரசையும் எடுத்து சென்று விட்டான்.''
********
''மச்சி,நான் என் மனைவியை விவாகரத்து பண்ணப்போறேன்டா.''
'ஏண்டா திடீரென்று?'
''பின்ன என்னடா,மூன்று மாதமா என்கிட்டே அவள் பேசுவதே இல்லை.''
'மச்சி,நல்லா யோசிச்சுக்கடா,இந்த மாதிரி பொண்ணு கிடைக்க மாட்டாடா.அவனவன் தன் மனைவி பேச்சை நிறுத்த மாட்டாளா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறான்.நீ என்னடான்னா.'
********
|
|
ஹா... ஹா.. நன்றி...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_6.html) சென்று பார்க்கவும்... நன்றி...
haaa haaaa
வணக்கம்
நல்ல அருமையன பதிவு நல்ல நகைச்சுவை பாணியில் எழுதப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் வலைச்சரம் வலைப்பதிவில் உங்களின் ஆக்கம் வெளிவந்துள்ளது (06-11-2012)வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பின் ஜெயராஜன் - நகைச்சுவை அருமை - 1250க்கு மேற்பட்ட பதிவுகளை எழுதி இருப்பது பிரமிக்க வைக்கிறது. நற்பணிக்கு நல்வாழ்த்துகள் - வலைச்சரத்திலும் அறிமுகப் படுத்தப் பட்டிருக்கிறது. நட்புடன் சீனா