சோம்பல் மிக மெதுவாக நடப்பதால்
வறுமை அவனை எளிதில் பிடித்து விடுகிறது.
********
நன்றியும் கோதுமையும் நல்ல இடத்தில்தான் விளையும்.
********
குற்றம் என்ற புற்றுக்குள் கை வைத்தால்
சட்டம் என்னும் பாம்பு கடிக்கத்தான் செய்யும்.
********
உணர்ச்சி வேகத்தில் அறிவாளியும் மடையன் ஆகிறான்.
********
வெளியே காட்டிய கோபம் மன்னிப்புக்கு வழி தேடும்.
உள்ளே அடக்கிய கோபம் பழிக்கு வழி தேடும்.
********
ஒரு பூனை திருட்டுப் போயிற்று என்று சட்டத்தின் உதவியை நாடினால்
ஒரு பசுவை விற்கே வேண்டிய நிலை வந்துவிடும்.
********
எக்காரியத்தையும் தயங்கித் தயங்கிச் செய்பவன்
ஒரு காரியத்தையும் செய்து முடிக்க மாட்டான்.
********
தவறாக புரிந்து கொள்கிற உண்மையைக் காட்டிலும் பெரிய பொய் வேறு எதுவும் இல்லை.
********
ஆனால் என்ற வெறுக்கத்தக்க வார்த்தை வந்துவிட்டால், முன்னால் சொன்னது எல்லாம் வீணாகிவிடும்.அதற்கு இல்லை என்று மறுப்பதோ அவமானப் படுத்துவதோ மேல்.
********
சில சமயங்களில் நமக்குப் பதிலாக நம் உணர்ச்சிகளே பேசுகின்றன.முடிவு செய்கின்றன.நாம் அருகில் நின்று பயந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
********
துயரங்களை எதிர்பார்ப்பவன் இரண்டு முறை துயரம் அடைகிறான்.
********
புறாவைப்போல பறந்துவிடும் பேச்சை
நாலு குதிரைகள் சேர்ந்தாலும் இழுக்க முடியாது.
********
|
|
அருமையான பொன்மொழிகள்... நன்றி ஐயா...
புதுமையான சிந்தனைகளையும் கருத்துக்களையும் அழகாய் வெளிப்படுத்தும் ஒரு சிறந்தப் படைப்பு அருமை அனைத்துப் பொன்மொழிகளும் . பகிர்ந்தமைக்கு நன்றி
like this..
saravanabhava.chicago
தனபாலனுக்கு நன்றி.
மிகச்சிறந்த வலைத்தள எழுத்தாளர் பனித்துளி சங்கர அவர்களின் பாராட்டு மகிழ்ச்சி ஊட்டுகிறது.
நண்பர் சரவண பவாவுக்கு நன்றி.
நல்ல படைப்புகள் சார்.....சிலவற்றை நிறையவே நான் எனது முக நூல் பக்கங்களில் பகிர்ந்து கொள்கிறேன் ...நன்றும்...