ஒரு பையன் பள்ளிக்கு சற்று தாமதமாக வீட்டை விட்டுக் கிளம்பினான். அவனுக்கு ஆசிரியர் அடிப்பாரோ,திட்டுவாரோ,என்று அச்சம் ஏற்பட்டது. எனவே வேகமாக நடந்து கொண்டே,''கடவுளே,இன்று நான் பள்ளிக்கு தாமதமில்லாமல் சரியான நேரத்திற்கு சென்றிட வேண்டும்.அதற்கு நீ துணை புரிய வேண்டும்.ஆசிரியரிடமிருந்து என்னைக் காக்க வேண்டும்,''என்று வேண்டிக் கொண்டான்.அவனது கவனம் பிரார்த்தனையில் இருந்ததால் சாலையில் கிடந்த வாழைப்பழத் தோலை கவனிக்கவில்லை.அதில் காலை வைத்ததும் வேகமாக சறுக்கி விழுந்தான்.அது ஒரு இறக்கமான சாலை என்பதால் சறுக்கியதில் பல அடி தூரம் சென்று விட்டான்,அப்போது அவன்,''அடக் கடவுளே!விரைவில் பள்ளி செல்ல உதவச்சொன்னால் இப்படியா தள்ளி விடுவது?''என்று புலம்பினான்.
|
|
அடக்கடவுளே!இப்படியா தள்ளி விடுவது?''
அடக் கடவுளே! ஹா! ஹா! ஹா!
ஹா... ஹா...
நன்றி நண்பர்களே!