ராமு சோமுவிடம்,''இரண்டு நண்பர்கள் ஆற்றுக்குப் போகிறார்கள்.ஒருவன் சுத்தமாக இருக்கிறான்.மற்றவன் மிகவும் அழுக்குடன் இருக்கிறான்.இருவரில் யார் ஆற்றில் குளிப்பார்கள்?''என்று கேட்டான்.சோமு சொன்னான்,''இது என்ன கேள்வி?அழுக்கானவன் தான் குளிப்பான்.''ராமு சொன்னான், ''அல்ல. அழுக்கானவன் அந்த அழுக்குக்குப் பழகி விட்டான்.அதனால் சுத்தமானவன் தான் தன்னை மீண்டும் சுத்தப் படுத்திக்கொள்ள குளிப்பான். பரவாயில்லை, அதே கேள்வியை மீண்டும் கேட்கிறேன்.இருவரில் யார் குளிப்பார்?''சற்று யோசித்த சோமு,''சுத்தமானவன் தான் மீண்டும் குளிப்பான்.''என்றான்.ராமு சொன்னான்,''இது சரியான பதில் அல்ல.சுத்தமானவன் ஏன் குளிக்க வேண்டும்?அழுக்கானவன் தான் தன்னை சுத்தப் படுத்திக் கொள்ளக் குளிக்க வேண்டும்.பரவாயில்லை மறுபடியும் அதே கேள்வியைக் கேட்கிறேன். இருவரில் யார் குளிப்பார்?''சுதாரித்துக் கொண்ட சோமு சொன்னான், ''இருவரும் தான் குளிப்பார்கள்.அழுக்கானவன்,தனது அழுக்கைப் போக்கிக் கொள்ள:சுத்தமானவன் இன்னும் சுத்தமாகிக் கொள்ள. ''ராமு சொன்னான், ''தவறு.இருவரும் ஏன் குளிக்க வேண்டும்?சுத்தமானவன் குளிக்க வேண்டியதில்லை.அழுக்கானவன் ஏற்கனவே அழுக்குடன் பழகி விட்டான்.
|
|
சரியாகச் சொன்னீர்கள்...
அருமை! பகிர்வுக்கு நன்றி!
பாராட்டுக்களுக்கு நன்றி.