தனது வருமானத்தில் பெரும்பகுதியை ஆடம்பரமாக செலவு செய்யும் ஒரு மனிதனுக்கு வாய்த்த மனைவியோ கடும் சிக்கனக்காரி.அந்த மனிதன் எதை செய்தாலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணுபவர்.தான் இறந்தபின் தன் கல்லறை கூட சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் தான் இறந்து விட்டால் தன் மனைவி நன்கு செலவு செய்து தனது விருப்பப்படி கல்லறையை அமைக்க மாட்டார் என்று திடமாக நம்பினார்.எனவே அவர் உயிருடன் இருக்குபோதே ஒரு சிறந்த கட்டடக் கலைஞரை வைத்து நிறைய செலவு செய்து தனக்கென்று ஒரு கல்லறையை அமைத்தார்.அந்தக் கல்லறையில் ''அமைதியாக ஓய்வெடு ''என்றும் கல்லிலே அழகாக எழுத ஏற்பாடும் செய்தார்.சில மாதங்களில் அவர் இறந்து போனார்.அவர் உயில் எடுத்து வாசிக்கப்பட்டது.உயிலில் அவர்,''வாழ்க்கையை நான் நன்கு அனுபவித்தேன்.நான் எதுவும் சேமிக்கவில்லை. நான் யாருக்கும் எந்த சொத்தையும் விட்டுச் செல்லவில்லை.''என்று குறிப்பிட்டிருந்தார்.அதைக் கேட்டவுடன் அவர் மனைவிக்கு வந்ததே கோபம்!அவர் நேரே கல்லறைக்கு சென்றார்.''அமைதியாக ஓய்வெடு ''என்று எழுதப்பட்டிருந்ததை வாசித்தார்.உடனே ஒரு ஆளை வரவழைத்து அந்த வாக்கியத்துக்கு முன்,''நான் வரும்வரை''என்பதனை சேர்த்து விட்டார். .
|
|
haa haa...
எங்கே போனாலும் விட மாட்டேன்...!