பொறுமையிலும் உயர்ந்த தவம் இல்லை.
திருப்தியிலும் உயர்ந்த இன்பம் இல்லை.
அவாவிலும் பெரிய தீமையில்லை.
கருணையிலும் பெரிய அறமில்லை.
மன்னித்தலிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் இல்லை.
**********
சிறிது காலம் வாழக் கூடிய
ஒரு கொடுங்கோல் ஆட்சி -அழகு.
**********
நல்லவற்றைக் கூட்டிக்கொள்.
தீயவற்றைக் கழித்துக்கொள்.
அன்பைப் பெருக்கிக்கொள்.
வாழ்வை வகுத்துக்கொள்.
**********
நன்மையை செய்யுங்கள்.
யாருக்கென்று மட்டும் கேட்காதீர்கள்.
**********
அதிர்ஷ்டம் எதிர்ப்பட்டால் அதன் முன் தலையைப் பிடித்து வசப்படுத்து.
ஏனெனில் அதன் பின்புறம் வழுக்கை.
**********
அடுத்தவன் சுகமாக வாழ்கிறானே என்ற எண்ணம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணம்.
**********
செய்த தவறை மறைப்பது,இரண்டு முறை தவறு செய்ததற்கு ஒப்பாகும்.
**********
சமாதானம் என்பது இரண்டு சண்டைகளுக்கு இடையில் உள்ள இடைவெளி.
**********
இறைவனைத் தேடிச்சென்று வணங்கக்கூட நேரம் இல்லாமலேயே உழைத்துக் கொண்டிருக்கிறீர்களா?கவலைப்படாதீர்கள்.உழைப்புத்தான் சிறந்த வழிபாடு.
**********
பணம் உள்ளவனுக்கு கருமித்தனம் அவசியமில்லை.
கருமித்தனம் உள்ளவனுக்கு பணம் அவசியமில்லை.
**********
எவ்வளவு சொன்னாலும் அதனால் எந்த ஒரு பயனும் விளையாது என்று தெரிய வருமேயானால் அந்த ஒரு சொல்லைக்கூட விரயம் செய்யாதே.
**********
|
|
Post a Comment