நாம் ஒன்றை நினைத்துக் கொண்டு சொல்ல,அதைக் கேட்கிறவர்கள் வேறு விதமாகப் புரிந்து கொண்டு விடுவது சாதாரணமாக நடக்கிறது.ஆனால் இந்த சாதாரண செயலின் விளைவு சிலசமயம் மிகவும் விபரீதமாக முடிந்து விடுவதுண்டு.சொல்லுபவர்கள் எவ்வளவு சரியாகச் சொன்னாலும் புரிந்து கொள்பவர்கள் தவறாகப் புரிந்து கொள்வது ஒரு வகைக் கொடுமை.சொல்பவன் தன மன நிலைக்கேற்ப சொல்வான்.கேட்பவன் தன மன நிலைக்கேற்ப புரிந்து கொள்வான்.இருவரின் மன நிலைகளுக்கும் இருக்கும் இடைவெளியில் ஏற்படும் விபரீதம் தான் தவறான புரிதல்.
குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படும் பெரும்பாலான சர்ச்சைகள்,சொல்வதில் தெளிவின்மை,புரிந்து கொள்வதில் தவறு ஆகியவற்றால் உண்டாகின்றன.கணவனோ,மனைவியோ,சரியான காரண காரியங்களோடு எடுக்கிற ஒரு முடிவை அடுத்தவரிடம் சொல்லும்போது , அந்த முடிவுக்கு வந்த முறையை சொல்லாமல் முடிவை மட்டும் சொல்வதால் குழப்பம் விளைவதுண்டு.எப்போதும் சொல்வதைத் தெளிவாக சொல்லி விட்டால்,''அப்படியா சொன்னீங்க !''என்ற ஆராய்ச்சிக்கே இடமிருக்காது.
|
|
சரியான விளக்கம். வாழ்க்கையில் அடிக்கடி நடக்கும் சமாசாரம் இது.
கமென்ட் போடறதுக்கு கொஞ்சம் கஷ்டமா இருக்குங்க.