உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

பெருந்தன்மை

0

Posted on : Thursday, February 24, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவர் தெரிந்தே செய்யும் தவறை சுட்டிக்காட்ட வேண்டாம்.அப்படி செய்வதால் அவரது நெஞ்சம் மேலும்மேலும் குறுகுறுக்கும்.உடனே அவர் தன்னிலை விளக்கம் தருவார்.அல்லது சீற்றம் அடைவார்.இருவருக்கும் இடைவெளிதான் அதிகரிக்கும்.பெரும்பாலும் மக்கள் தாம் செய்த தவறுகளை  அறிந்தேயிருப்பர்.ஆனால் பிறர் அதை சுட்டிக்காட்டுவதை விரும்புவதில்லை. ஒருவரின் தவறுகளை சுட்டிக்காட்டும் முன் உங்கள் கருத்துரைகள் எந்த வழியிலாவது நிலைமையை சீராக்குமா,அன்பை வளர்க்குமா என்பதை எண்ணிப் பாருங்கள்.பெருந்தன்மையாக இருப்பவர்கள்,பிறர் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களைக் குற்றவாளியாக்க மாட்டார். அதே சமயம் பரிவோடும் ஆதரவோடும் வார்த்தைகளால் அல்ல,நடத்தைகளால் அவர்களைத் திருத்துவார்கள்.
**********
முக்கியமானவைகளும் முக்கியமற்றவையும் காலத்தாலும் இடத்தாலும்  மாறுபடுகின்றன.பசியாக இருக்கும்போது உணவு முக்கியம்.வயிறு நிறைந்திருக்கும்போது உணவு முக்கியமில்லை.
**********
திரும்பத்திரும்ப செயல்படும் ஒரு செயல் தன புனிதத்தை இழந்து  விடுகிறது.காசியில் வசிப்பவர்கள்,அது ஒரு புனிதமான இடம் என்று கருதுவதில்லை.
**********
சமமானவர்களிடம் தான் சண்டை நடக்க முடியும்.நீங்கள் ஒருவருடன் சண்டை போடும்போது அவரை உங்களுக்கு சமமாக ஆக்கி விடுகிறீர்கள். மற்றவர்களை உங்களுக்கு மேலோ,கீழோ வைத்துக் கொண்டால் சண்டை  இருக்காது.மேலோர் என்றால் மதிப்பு காட்டுவீர்கள்.கீழோர் என்றால் அன்பும் பரிவும் காட்டுவீர்கள்.புலன்களுக்கு இடையே மனம் சிக்கிக் கொள்ளும்போது சண்டை இருக்கும்.புலன்களை விட மனம் பெரிது என்று உணர்ந்து கொண்டால் சச்சரவு இருக்காது.
**********
                    ----ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் எழுதிய 'ஞானம் தேடுபவருக்கு'என்ற நூலிலிருந்து.

தங்களுக்கு இந்த பதிவு பிடித்திருந்தால், புதிய பதிவுகளை மின்னஞ்சல் வழியாக பெற

தங்கள் இமெயில் முகவரி:

Comments (0)

Post a Comment