ஞானி ஒருவர் தெருவில் வந்து கொண்டிருந்தார்.எதிரே ஒரு விவசாயி தனபசுவைக் கையிற்றால் கட்டி அழைத்து வந்தான்.சிரித்துக்கொண்டே ஞானி விவசாயியிடம் கேட்டார்,''நீ பசுவுடன் வருகிறாயா?பசு உன்னுடன் வருகிறதா?''குழம்பிப்போன விவசாயி,''இது என்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி?பசுதான் என்னோடு வருகிறது,''என்றான்.உடனே ஞானி,''அப்படியானால் கயிறு எதற்கு?விட்டுவிடு!''என்றார்.''கயிற்றை விட்டால் பசு ஓடி விடுமே?''என்றான் விவசாயி.''அப்படியானால் அதுதான் உன்னைப் பிணைத்துள்ளது.நீ அதைப் பிணைக்கவில்லை,''என்றார்ஞானி. விவசாயிக்கு அவர் சொன்னது புரியவில்லை.ஞானி விளக்கினார்,''பசு உன்னுடன் வருவதாயிருந்தால் நீ கட்டை அவிழ்த்து விட்டாலும் அது உன்னுடன் வர வேண்டும்.ஆனால் நிலைமை அப்படி இல்லை.கட்டை அவிழ்த்தால் அது ஓடிவிடும்.அது ஓடினால் அதைத் துரத்திக் கொண்டு நீ ஓடுவாய்.நீ ஓடினால் அது உன்னை விரட்டிக் கொண்டு வராது.உண்மையில் அதனுடன் நீதான் கட்டப்பட்டுள்ளாய்.''
எவற்றையெல்லாம் 'இது என்னுடையது'என்று பிணைக்கிறோமோ,உண்மையில் அவற்றுடன் நாம் தான் பிணைக்கப்பட்டுள்ளோம்.எவை வேண்டுமோ,அவற்றை நாம் தான் பாதுகாக்கிறோம்.
|
|
Post a Comment