சூபி ஞானி பாசித் பிசுடமியிடம் பேசிய பலரும் இறைவனை இடைவிடாது தொழுவதன் சிறப்புப் பற்றி கேட்டார்கள்.அப்போது அவர் கூறினார்,''நான் முதல் முறை மெக்காவுக்கு சென்றேன்.அங்குள்ள புனித மசூதி கட்டிடத்தைப் பார்த்தேன்.இரண்டாவது முறை போனபோது என் கண்களுக்கு கட்டிடம் தென்படவில்லை;அந்த இடத்தில் இறைவனை நான் கண்டேன்.மூன்றாவது முறை நான் சென்றபோது நான் புனித கட்டிடத்தையும் காணவில்லை;கடவுளையும் காணவில்லை.''
இறைவன் வேறு,நாம் வேறு என்ற உணர்வு உள்ளவரைதான் நாம் பல்வேறு இடங்களில் அவரைத் தேடுகிறோம். இது புனிதமான இடம்,இது அசுத்தமான இடம் என்றெல்லாம் மனம் அப்போது கற்பிதம் செய்யும்.எல்லாம் இறைவனே என்று உள்மனம் உணர்ந்தபின் தனியான இடமோ,தனியான தோற்றமோ நம்மால் உணரப்படுவதில்லை.
வரம்புகள் அற்ற ஒன்றை வரம்புக்குள் கட்டுப்படுத்த நினைப்பதே அறியாமைதான்.இந்த முறையில் வணங்கு,இத்தனை முறை ஜெபி போன்ற வரைமுறைகளை செயல்படுத்துவதில்தான் ஈடுபாடு காட்டுமே தவிர இயற்கையில் ஒன்றாது.''எது இயல்போ,அதுவாகவே இரு''என்கின்றனர் சூபி ஞானிகள்.
===''சூட்சுமத்தை உணர்த்தும் சூபி கதைகள்'' என்ற நூலிலிருந்து.
|
|
Post a Comment