நீங்கள் எதை வேண்டுமானாலும் மற்றவர் தலையில் கட்டிவிடலாம்:உங்கள் கவலையைத்தவிர.ஏனெனில் அது உங்கள் சுமை.சிலர் எதற்கும் கவலைப் படுவதில்லை.சிலர் எதெற்கெடுத்தாலும் கவலைப் படுகிறார்கள்.கவலை துளி அளவு படலாம்.அது எச்சரிக்கை உணர்வைத் தோற்றுவிக்கும்.அதே கவலை அளவுக்கு மீறினால் டெண்சன் தான் வரும்.நியாயமான கவலைகள் மனிதன் இயல்பு.கவலைப் படாமல் இருக்கவும் முடியாது.இன்றைய வாழ்வைப் பற்றிக் கவலைப் படுங்கள்.நாளைய மரணத்தைப் பற்றி மாய்வது அனாவசியம். நேற்று நடந்ததைப் பற்றி நினைத்து வருந்துவதில் பயனில்லை.எதையும் எதிர் மறையாக சிந்திக்காதீர்கள்.மற்றவர்கள் மீது நம்பிக்கை இல்லாத போதும்,நம் மீதே நம்பிக்கை இல்லாத போதும் கவலை வந்து விடுகிறது. கவலைகள் காளானைப் போல முளைக்கும்.விட்டு வைத்தால் மலையைப் போல வளர்ந்து நம்மை மலைக்க வைக்கும்.கவலைப் படுகிற சுபாவம் தொற்று நோய்போல,ஒருவரிடமிருந்து இன்னொருவருக்குப் பரவும்.சிலர் நோய் வந்து கவலைப் படுவார்கள்.சிலர் எந்த நோயும் இல்லாமலேயே ஏதோ நோய் இருப்பதாக எண்ணிக் கவலைப் படுவார்கள்.''எதுவும் நம் கையில் இல்லை'','கடமையைச்செய்'என்ற கீதையின் வாசகங்களை நினைவில் வையுங்கள்.
|
|
நல்ல கருத்துக்கள் சார்...
நன்றி...
நல்ல சிந்தனைகள் கருத்துக்கள் சார்