உங்கள் மனதில் நிறைந்துள்ளவை எல்லாம் உங்களுடையவை அல்ல.நீங்கள் அவற்றையெல்லாம் தாண்டியவர்கள்.நீங்கள் அவற்றுடன் உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள்.அதுமட்டும்தான் பாவம்,குற்றம். உதாரணமாக, யாராவது உங்களை அவமதித்து விடுகிறார்கள்.நீங்கள் கோபமடைகிறீர்கள் .நீங்கள் கோபம் அடைவதாக எண்ணுகிறீர்கள்.ஆனால் அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது அவரது அவமதிப்பு ஒரு ரிமோட் கண்ட்ரோல்.உங்களை அவமதித்த மனிதன் உங்களுடைய நடவடிக்கையைக் கட்டுப் படுத்துகிறான். உங்களது கோபம் அவன் கையில் உள்ளது.நீங்கள் ஒரு கைப்பாவையாகச் செயல் படுகிறீர்கள்.
********
புத்தர் கூறுகிறார்,''கோபப்படுவது என்பது முட்டாள்தனமானது.யாரோ என்னவோ செய்கிறார்.நீங்கள் கோபமடைகிறீர்கள்.அவர் ஏதாவது தவறாகச் செய்யக் கூடும்.தவறாகச் சொல்லக் கூடும். . உங்களை அவமதிக்க ஏதேனும் முயற்சி செய்யக் கூடும்.ஆனால் அது அவரது சுதந்திரம்.நீங்கள் எதிர்ச் செயல் புரிந்தால் நீங்கள்தான் அடிமை என்றாகிறது.'' நீங்கள் அந்த மனிதரிடம்,''உனது மகிழ்ச்சி என்னை அவமதிப்பது.எனது மகிழ்ச்சி கோபம் கொள்ளாமல் இருப்பது.''என்று கூறினால் நீங்கள் எஜமானனைப் போல நடந்து கொள்கிறீர்கள் என்று பொருள்.
********
|
|
நல்ல கருத்துக்கள்... நன்றி...