ஒரு முறை அறிஞர் அண்ணா தேர்தல் கூட்டம் ஒன்றிற்கு இரவில் மிகத் தாமதமாக வந்தார்.இருப்பினும் அவர் வருகைக்காக பெருந்தொகையான மக்கள் காத்திருந்தனர்.அண்ணா பேசினார்,
''மாதமோ....சித்திரை.
மணியோ பத்தரை.
தழுவுவதோ நித்திரை.
இடுவீர் எமக்கு முத்திரை.''
மக்களின் கரவொலி அடங்க நீண்ட நேரம் ஆகியது.
********
அண்ணா முதல்வராயிருந்தபோது எதிர்க்கட்சித் தலைவர் சொன்னார், ''புளி விலை இப்போது அதிகமாக இருக்கிறது எங்கள் ஆட்சியில் புளியின் விலை மிகக் குறைவாக இருந்தது.இது யாருடைய சாதனை?''அண்ணா சொன்னார்,''இது புளிய மரத்தின் சாதனை!''
********
|
|
நல்ல நகைச்சுவை! அண்ணாவின் நினைவுகளை கூர்ந்தமைக்கு நன்றி!
ஹா... ஹா... ரசிக்க வைக்கும் பேச்சு...
இப்படி பேசி பேசிதான் நல்லாட்சி செய்த காமராஜரை வீழ்த்திவிட்டு திருட்டுக் கூட்டம் தமிழ்நாட்டை பீடைபோல் பிடித்து கொண்டுள்ளது.