''உங்க பள்ளியிலே ராமன் என்று ஒரு ஆசிரியர் உண்டே,அவர் என்ன எடுக்கிறார்?''
'எங்க உயிரை எடுக்கிறார்.'
********
ஆசிரியர்:தானத்திலே சிறந்த தானம் எது?
விளையாட்டு வீரன்:மைதானம் சார்.
********
முட்டை வியாபாரி:என் பையன் எப்படி படிக்கிறான்?
ஆசிரியர்:நீங்கள் விற்கிறீர்கள்:அவன் வாங்குகிறான்.
********
''அப்பா,நான் தேர்வின் முதல் படியிலே இருக்கிறேன்.''
'என்ன சொல்லுகிறாய்?'
''நீங்கள் தானே சொல்லியிருக்கிறீர்கள்,தோல்விதான் வெற்றியின் முதல் படி என்று!''
********
அப்பா:கணக்கு பாடத்தில் என்ன மதிப்பெண் பெற்றுள்ளாய்?
மகன்:பக்கத்து வீட்டு முருகனை விட ஐந்து மதிப்பெண்கள் குறைவு.
அப்பா:முருகன் என்ன மதிப்பெண் பெற்றுள்ளான்?
மகன்:ஐந்துதான்.
********
''2020 ல் உலகம் எப்படி இருக்கும்?''
'அதிலென்ன சந்தேகம்?அப்போதும் உருண்டையாகத்தான் இருக்கும்.'
********
அப்பா:இந்த மாதம் உங்கள் வகுப்பில் புதிதாய் ஒரு மாணவனை சேர்த்திருக்கிறார்களோ?
மகன்:அதெப்படியப்பா உங்களுக்குத் தெரியும்?''
அப்பா:போன மாதம் நீ நாற்பதாவது ரேன்க் எடுத்திருந்தாய் .இந்த மாதம் நாற்பத்தியோராவது ரேன்க் எடுத்திருக்கிறாயே!
********
ஆசிரியர்:நான் பாடம் நடத்திக் கொண்டிருந்தபோது தூங்கிக் கொண்டிருந்தாயே,உனக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
மாணவன்:அந்த பாடத்தை மீண்டும் நடத்தி விடுங்கள்,சார்.
********
''தேளின் கொடுக்கில் என்ன இருக்கிறது?''
'தொண்டையில் இருக்கிறது, ஆனால் வர மாட்டேங்குது'
''பார்த்து!முழுங்கித் தொலைத்து விடாதே, அது விஷம்.''
********
''நான் ஒரு பழமொழியில் பாதியை சொல்லுவேன்.மீதியை நீ சொல்கிறாயா, பார்ப்போம்.கடுகு சிறுத்தாலும்.........''
'விலை குறையாது.'
********
|
|
haa haaa
nantri anne!
ஹா... ஹா... கலக்கல்...