ஒரு நாள் முல்லா சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தார்.எதிரே வந்த நண்பர்,முல்லாவின் முகத்தைப் பார்த்து அவர் எதோ வலியினால் அவதிப்படுவதுபோல உணர்ந்தார்.''என்ன முல்லா,தலை வலியா,வயிற்று வலியா?ஏன் என்னவோபோல இருக்கிறீர்கள்?''என்று கேட்டார்.முல்லா சொன்னார்,''வேறொன்றுமில்லை,நான் அணிந்திருக்கும் செருப்புக்கள் என் காலுக்கு மிகச் சிறியவையாக இருப்பதால் பாதத்தில் வலி எடுக்கிறது.''''பின் ஏன் அவற்றை அணிந்திருக்கிறீர்கள்?என்று நண்பர் கேட்க,முல்லா சொன்னார்,''இந்த செருப்பினால் தான் ஒவ்வொரு நாளும் நிம்மதி அடைகிறேன்.நாள் முழுவதும் இந்த சிறிய செருப்புக்களை அணிந்து நடந்துவிட்டு பாதங்களில் வலியுடன் வீட்டிற்குச் சென்று அவற்றைக் கழட்டியவுடன் கிடைக்கும் ஒரு விடுதலை உணர்வு இருக்கிறதே,அதற்கு இணை எது?இது ஒன்றுதான் நான் அடையும் மகிழ்ச்சி.எனவே இந்த செருப்புக்களை நான் விட மாட்டேன்.''
|
|
Post a Comment