''என் உடல் மெலிந்து கொண்டே போகிறது,டாக்டர்,''என்று ஒருவன் டாக்டரிடம் கூறினான்.டாக்டர் கேட்டார்,''உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா?
நோயாளி சொன்னான்,''நான் ஒரு செயின் ஸ்மோகர், டாக்டர்.''
டாக்டர்:அந்தப் பழக்கத்தை உடனே நிறுத்த வேண்டும்.சரி,குடிப்பழக்கம் உனக்கு உண்டா?
நோயாளி:தினசரி குடிப்பேன்,டாக்டர்.அது இல்லாவிட்டால் எனக்கு ஒன்றுமே ஓடாது.
டாக்டர்:குடி குடியைக் கெடுக்கும் என்று உனக்குத் தெரியாதா?உடனே குடிப்பதை நிறுத்து.அப்புறம் பெண்கள் பழக்கம் உண்டா?'
நோயாளி:நினைத்தபோதெல்லாம் போவதுண்டு டாக்டர்.
டாக்டர்:இந்த மூன்றையும் நீ முதலில் நிறுத்தினால்தான் உடம்பு நன்றாக இருக்கும்.
நோயாளி:பரவாயில்லை டாக்டர்,என் உடல் மெலிவது பற்றி எனக்கு இப்போது கவலையில்லை.
**********
கடுமையான நோயினால் பாதிக்கப்பட ஒருவன் குணமடைந்ததும், டாக்டர் சிகிச்சைக்கான பில்லைக் கொடுத்தார்.பில் தொகை மிக அதிகமாக இருப்பதாக நோயாளி சொன்னான்.டாக்டர் சொன்னார்,''நான் சிகிச்சைக்காக பத்து முறை உன் வீட்டிற்கு வந்துள்ளேன்.ஊசி போட்டிருக்கிறேன்.மாத்திரைகள் கொடுத்திருக்கிறேன்.நான் குறைவாகவே கேட்கிறேன்,''நோயாளி சொன்னான்,''நான் உடல் நலமில்லாதிருந்தபோது என்னைப் பார்க்க வந்த பத்துப் பேருக்கு என் நோயைப் பரப்பி அவர்கள் தற்போது உங்களிடம் சிகிச்சை எடுத்து வருகிறார்களே,அதையும் கொஞ்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளுங்கள்,டாக்டர்.''
**********
|
|
Post a Comment