ஒரு சிறுவன் தன் தந்தையிடம்,''அப்பா,உனக்கு அறிவு இருக்கா?''என்று கேட்டான்.தந்தையும் சிரித்துக் கொண்டே,''ஓ ,இருக்கே !''என்றார் . சிறுவனும் விடாது ''சரி,நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லு.நான்கை ஒன்றால் பெருக்கினால் என்ன வரும்?''என்று கேட்க அவரும் நான்கு என்று சொன்னார்.அடுத்து நான்கை
இரண்டால் பெருக்க என்ன வரும் என்று கேட்க,எட்டு என்று விடை சொன்னார்.
பின் நான்கை மூன்றால் பெருக்கினால் என்ன வரும் கேட்க அதற்கும் பன்னிரண்டு
என்று சொன்னார்.பையன் உற்சாகமாக,''முதலில் உன்னிடம் நான் என்ன கேள்வி
கேட்டேன்?'''என்று கேட்டான் தந்தை சொன்னார்,''நான்கை ஒன்றால்
பெருக்கினால் என்ன
வரும் என்று கேட்டாய்,''என்றார்.பையன் உற்சாகமாகத் தாவிக் கொண்டே சொன்னான்,''அதுவா முதல் கேள்வி?உனக்கு அறிவு இருக்கா
என்று கேட்டேனே,அது தானே முதல் கேள்வி ?''
|
|
Post a Comment