ஒரு கட்டடத்தின் ஆறாவது மாடியில் இருந்த அலுவலகத்தில் பணியாற்றும் தமிழர்,குஜராத்தி,சர்தார்ஜி ஆகிய மூன்று நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து மதிய உணவு சாப்பிடுவர்.தமிழர் தினமும் இட்லி சட்னி,குஜராத்தி தினமும் பிரியாணி,சர்தார்ஜி தினமும் சப்பாத்தி சப்ஜி கொண்டு வருவது வழக்கம்.தினசரி ஒரே மாதிரி சாப்பிட்டதில் அலுத்துப்போய் தமிழர் சொன்னார்,''நாளை மட்டும் இதே இட்லி சட்னி எனது டிபன் பாக்ஸில் இருந்தால் நான் இந்த ஆறாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொள்வேன்.''குஜராத்தியும் மறுநாள் உணவுக்கு பிரியாணி இருந்தால் நானும் அவ்வாறே குதிப்பேன் என்று சொல்ல,சர்தார்ஜியும் மறுநாள் சப்பாத்தியும் சப்ஜியும் இருந்தால் தானும் குதிப்பதாகச் சொன்னார்.மறுநாள் மூவரும் டிபன் பாக்ஸ்களைத் திறக்க உணவில் எந்த மாற்றமும் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.சொன்னபடி மூவரும் ஆறாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டனர்.மூவரது மனைவியர்க்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.அவர்கள் வந்ததும் தற்கொலைக்கான காரணத்தை அறிந்தனர்.''இப்படித் தெரிந்திருந்தால் இட்லி சட்னி கொடுத்திருக்க மாட்டேனே'' என்று தமிழ்ப்பெண் புலம்ப,பிரியாணி அனுப்பியிருக்க மாட்டேனே என்று குஜராத்திப்பேன் கதற,சர்தாரின் மனைவி மட்டும் அழுது கொண்டே சொன்னார்,''ஐயோ,சப்பாத்தி செய்ததும் அதை டிபன் பாக்சில் வைத்ததும் அவர்தானே!''
|
|
Post a Comment