நெப்போலியன் ஒரு பெரிய போரில் ஈடுபட்டிருந்தார்.போரின் விதியை நிர்ணயிக்கும் ஒரு தகவலுக்காகக் காத்திருந்தார்.அப்போது புழுதி பறக்க ஒரு வீரன் குதிரையில் காற்றினும் கடுகி வந்து கொண்டிருந்தான்.வந்தவன் நெப்போலியனுக்கு முன் வந்து கம்பீரமாக இறங்கி முறைப்படி மரியாதை செலுத்திவிட்டு அந்த முக்கியத் தகவலை சொன்னான்.. நெப்போலியனுக்கு மிக்க மகிழ்ச்சி.வந்த பதில் அவருக்கு சாதகமாக இருந்தது.தகவலைக் கொண்டு வந்த வீரனுக்கு ஏதாவது பரிசு கொடுக்க எண்ணி அவ்வீரனைப் பார்த்தார்.அப்போதுதான் அவன் உடல் முழுவது ரத்தம் வழிந்து
கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டார்.உடனே அவனை நோக்கி,''நீ காயப் பட்டிருக்கிறாயா?''என்று கேட்டார்.அவன் உற்சாகம் சிறிதும் குறையாது பெருமையுடன்,''இல்லை அய்யா,நான் இறந்து கொண்டிருக்கிறேன்,''(NAY SIR,I AM KILLED.)என்று சொல்லியவாறு நெப்போலியன் காலடியில் விழுந்து விட்டான்.அவனைத் தூக்கிப் பார்த்தபோது அவன் உயிர் பிரிந்திருந்தது.உடல் முழுவதும் காயப்பட்டு இறக்கும் சூழ்நிலையிலும் தன உயிரைப் பிடித்துக்கொண்டு தன் கடமையை நிறைவேற்றிய அவன் மன வலிமை எத்தகையது?அவனுடைய விசுவாசம் எவ்வளவு உயரியது?
|
|
Post a Comment