செருப்புக் கடைக்கார ஒருவர்,ஒரு புதிய மனிதனை வேலைக்கு அமர்த்தியிருந்தார்.அன்று முதல் நாள்.கடைக்கு செருப்பு வாங்க ஒருவன் தன தந்தையுடன் வந்தான்.புதிய ஆள் அவர்களிடம் பல செருப்புகளைக் காட்டி பின் ஒரு ஜோடி காலணிகளைக் கட்டிக் கொடுத்து,பணத்தை வாங்கி தன் முதலாளியிடம் கொடுத்தான்.முதலாளி விபரம் கேட்க,அவன் கூறினான்,''நூறு ரூபாய் செருப்பைக் காட்டினேன்.அவனிடம் ஐம்பது ரூபாய் தான் இருந்தது.சரி,மீதியை நாளை கொண்டு வந்து கொடுத்து விடு என்று கூறி அவனிடம் செருப்பைக் கொடுத்தனுப்பி விட்டேன்.''முதலாளிக்குக் கோபம் வந்து விட்டது.''முட்டாளே!செருப்பு எடுத்து சென்றவன் திரும்பி வரவா போகிறான்?என்று திட்டினார்.அதற்கு வேலையாள் சொன்னான்,''ஏன் வரமாட்டான்?அவனென்ன,அவன் அப்பனும் வருவான்.காரணம் என்ன தெரியுமா?நான் இரண்டும் வலது கால் செருப்பாகக் கட்டிக் கொடுத்து உள்ளேன்.அவன் நிச்சயம் வரத்தான் செய்வான்.''
|
|
Post a Comment