தன் பேரன் சிறு சிறு தவறுகள் செய்யும் போதெல்லாம் ஒருவர் கடுமையான தண்டனைகள் கொடுத்து வந்தார்.சிறுவனின் தகப்பனாரால் தன் தகப்பனாரை கண்டிக்க முடியவில்லை.சிறுவனின் நன்மைக்காகத்தான் தண்டனைகள் கொடுப்பதாக பெரியவர் கூறிவிடுவார்.
ஒரு நாள் பெரியவர்,சிறுவனுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.சிறுவன் சரியாகக் கவனிக்கவில்லை என்று கோபம் கொண்டு சிறுவனை கடும் பனியில் நிறுத்தி விட்டார்.சிறுவன் நடுங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்த தகப்பனால் தாங்க முடியவில்லை.பெரியவரையும் ஒன்றும் கேட்கவும் முடியாத சூழ் நிலையில் சடசடவென தன் சட்டையைக் கழட்டினார்.வெளியே சென்று பனியில் தன் பையனுடன் சேர்ந்து நின்றார்.பெரியவர்,''நீ ஏன் குளிரில் நிற்கிறாய்?''என்று கேட்டார்.அவர் உடனே பதில் சொன்னார்,''தந்தையே!நீங்கள் என் மகனை குளிரில் நடுங்க வைத்து சிரமப்படுத்துகிறீர்கள்.பதிலுக்கு நான் என்ன செய்ய முடியும்?உங்கள் மகனைக் குளிரில் நடுங்க வைத்து சிரமப்படுத்துகிறேன்.''
இருவரையும் உள்ளே வரச் சொன்ன பெரியவர் அதன் பின் பேரனைக் கண்டிப்பதை நிறுத்தி விட்டார்.
|
|
Post a Comment