ஒரு ஆசிரியர் ஒரு மாணவனிடம்,''கடவுள் எங்கே இருக்கிறார்?''என்று கேட்டார்.மாணவன் சொன்னான்,''எங்கள் வீட்டுக் குளியல் அறையில்,''ஆசிரியர் இப்பதிலை சற்றும் எதிர் பார்க்கவில்லை.அவர் அவனிடம் கேட்டார்,''உனக்கு யார் இப்படி சொன்னது?''மாணவனும் உடனே சொன்னான்,''எனக்கு யாரும் சொல்லவில்லை.எனது தந்தைதினமும் குளித்துக் கொண்டிருக்கும்போது,என் தாயார் குளியல் அறைக் கதவின் முன் நின்று கொண்டு,'அடக்கடவுளே,இன்னுமா குளித்து முடிக்கவில்லை?'என்று கூவுவாள்.இதனால் கடவுள் குளியல் அறையில் இருக்கிறார் என்று தெரிந்து கொண்டேன்.''
|
|
Post a Comment