முல்லா ஒரு முறை தன சகோதரனின் பிறந்த நாளைக் கொண்டாட ஒரு உணவு விடுதிக்கு சென்று,நன்கு சாப்பிட்டு மகிழ்வுடன் சகோதரனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்.அப்போது எதிரில் ஒரு மனிதன் நன்கு குடித்து விட்டு இவர்களையே அதிசயமாகக் கண்ணைக் கசக்கிக் கசக்கிப் பார்த்துக் கொண்டிருந்தான்.இருவரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பார்கள்.எனவே முல்லா அவனிடம் சொன்னார்,''நீ குடித்ததனால் தான் நாங்கள் இருவராகத் தெரிகிறோம் என்று எண்ணாதே.நாங்கள் ஒரே மாதிரி இருக்கும் சகோதரர்கள்.''அதற்கு அந்தக் குடிகாரன் மீண்டும் கண்களை சுருக்கிக் கொண்டு அவர்களைப் பார்த்துக் கொண்டே கேட்டான்,''நீங்கள் நால்வருமா?''
|
|
Post a Comment