புகை வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த ஒருவர் ஒரு நிலையத்தில் சில இராணுவ வீரர்கள் அவர் இருந்த பெட்டியில் ஏறுவதைக் கண்டார்.நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அவர்கள் மீது அவருக்கு ஒரு ஈடுபாடு ஏற்பட்டது .அவர்களுடன் மனம் விட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.அப்போது உணவுக்கான ஆர்டர் எடுக்கும் ஒருவர் வந்தார்.ஒரு ராணுவ வீரர் சாப்பாட்டின் விலை கேட்டார்.விலை தெரிந்ததும் எந்த வீரரும் உணவுக்கு ஆர்டர் கொடுக்கவில்லை.அதைப் பார்த்த அவர் பையிலிருந்து ஆயிரம் ரூபாய் எடுத்துக் கொடுத்து வீரர்கள் அனைவருக்கும் சாப்பாடுக்கு ஆர்டர் கொடுத்தார்.அவர்கள் அனைவரும் முதலில் மறுத்தாலும் அந்த பெட்டியில் இருந்த அனைவரும் வற்புறுத்தவே இறுதியில் ஒப்புக் கொண்டனர்.சாப்பிட்டு முடித்தவுடன் அனைவரும் மகிழ்ச்சியுடன் தெம்பாகவும் இருந்தனர்.பணம் கொடுத்த நபர் இறங்க வேண்டிய நிலையம் வந்தது.வீரர்களிடம் விடை பெற்றுச் செல்லும்போது பெட்டியில் இருந்த ஒருவர் அவரின் பெருந்தனமையான செயலைப் பாராட்டிவிட்டு தன் பங்கு என்று கூறி இரு நூறு ரூபாய் கொடுத்தார்.உடனே மற்ற பயணிகளும் ஆளாளுக்கு பணம் கொடுக்க ஆரம்பித்துவிட்டனர்.இறுதியில் பணத்தை எண்ணிப் பார்த்ததில் இரண்டு ஆயிரம் ரூபாய் இருந்தது.அப்பணத்தையும் வீரர்களிடமே கொடுத்துவிட்டு முகத்தில் ஒரு திருப்தியுடன் அவர் பெட்டியிலிருந்து இறங்கினார்.
--ஒரு ஆங்கில இதழில் வந்த செய்தி. .
|
|
Post a Comment