ஒரு பெண்மணி,தன் வீட்டுத் தேவைக்கு சற்று தொலைவிலிருந்து தினம் தண்ணீர் கொண்டு வருவது வழக்கம்.ஒரு கம்பில் இரு முனைகளிலும் இரு பானைகளை தொங்கவிட்டுக் கொண்டு சென்று தண்ணீர் எடுத்து வருவார். இரண்டு பானைகளில் ஒரு பானையில் தண்ணீர் கொஞ்சம் ஒழுகும் இதனால் வீட்டிற்குச் செல்லும்போது அதில் பாதி அளவிற்குத்தான் தண்ணீர் இருக்கும்.ஒரு நாள் நல்ல நிலையிலிருந்த பானை ஓட்டைப் பானையைப் பார்த்து கிண்டல் செய்தது,''உன்னால் முழு உபயோகம் இல்லையே,'' அந்த ஓட்டைப் பானைக்கும் தன் மீதே வருத்தம் வந்தது.அது அந்தப் பெண்மணியிடம் வருத்தத்துடன் சொன்னது,''அம்மா,என்னால் உனக்கு பாதிப் பானை தண்ணீர் வீணாகிறது.என்னால் உனக்குத் தொல்லை.பேசாமல் என்னை கழட்டிவிட்டு வேறு பானையை உபயோகியுங்கள்,''அந்தப் பெண்மணி சிரித்துக் கொண்டே சொன்னாள்,''உன்னால் பயன் இல்லை என்று ஏன் எண்ணுகிறாய்?''
நான் வரும் பாதையைப் பார்த்தாயா?உன் பக்கம் தண்ணீர் ஒழுகியதால் நான் அந்தப் பக்கம் சில பூச் செடிகளை நட்டேன்.தினமும் தண்ணீர் விழுந்ததால் அச்செடிகள் நன்கு வளர்ந்து இப்போது பூத்துக் குலுங்குகின்றன.எனக்கு நிறைய பூக்கள் கிடைக்கின்றன,''அந்தப் பானைக்கு தன்னாலும் பயன் இருக்கிறது என்பது தெரிந்து மகிழ்ச்சி ஏற்பட்டது.
இதுபோலத்தான் நம்மிடையே குறை இல்லாத மனிதர்களே கிடையாது யாரிடம் என்ன குறை இருந்தாலும் அக்குறையுடன் அவர்களை ஏற்றுக் கொள்ளப் பழகினால் அதுதான் உண்மையான நட்பு.உண்மையான பாசம்.
|
|
Post a Comment