சுடாத மாவுப் பலகாரம் ஒன்றை காய்ந்து கொண்டிருக்கும் நெய்யில் போட்டால்,முதலில் படபடவென சப்தம் உண்டாகும்.பின்னர் அந்தப் பலகாரம் பொரியப் பொரிய அதன் சப்தம் குறைகிறது.முழுவதும் பொரிந்து விட்டால் சப்தம் முற்றிலும் நின்று விடுகிறது.அதே போல ஒருவனிடம் ஞானம் அற்பமாய் இருக்கும் வரை அவன் வாதம் புரிந்து,பிரசங்கமும் பிரச்சாரமும் செய்து கொண்டு போகிறான்.ஆனால் ஞானம் பூர்த்தி அடைந்ததும் இந்த விதமான வீண் வேளைகளில் அவன் மனம் செல்வதில்லை.
--ராமகிருஷ்ண பரமஹம்சர்.
|
|
Post a Comment