ஆப்பிரிக்கக் காடுகளில் ஆய்வு செய்ய இங்கிலாந்திலிருந்து ஒரு விஞ்ஞானியும் அவரது உதவியாளரும் வந்தனர்.ஒரு நாள் அவர்கள் மனித மாமிசம் சாப்பிடும் ஒரு கும்பலிடம் மாட்டிக் கொண்டனர்.விஞ்ஞானி பயந்து விட்டார்.அப்போது அந்த கும்பலில் ஒருவன் ஆங்கிலத்தில் அவர் எங்கிருந்து வருகிறார் என்ற விபரம் கேட்டான்.ஆச்சரியமடைந்த அவர் அவனுக்கு ஆங்கிலம் எப்படித் தெரியும் என்று கேட்க, அவனும் தான் சிறிது காலம் லண்டனில் இருந்து படித்ததாகக் கூறினான்.''நாகரீகமான ஒருவன் இருக்கிறான்,நாம் தப்பினோம்,''என்று எண்ணிய விஞ்ஞானி,''அப்படியானால் உங்கள் கூட்டத்திற்கு நல்ல நாகரீகம் கற்றுக் கொடுத்திருப்பாயே ?''என்று கேட்டார்.அவன் அமைதியாக சொன்னான்,''ஆமாம்,இப்போதெல்லாம் எங்கள் ஆட்கள் நர மாமிசத்தை ஸ்பூன்,முள் கரண்டி கொண்டுதான் சாப்பிடுகிறார்கள்.''
|
|
Post a Comment