தன்னிடம் வந்த சிறுவனைப் பரிசோதித்த டாக்டர் அவனுக்கு ஊசி போட வேண்டும் என்று கூறி சிரிஞ்சை எடுத்துக் கொண்டு அவனருகில் வந்ததுமே அவன் பயங்கரமாகக் கத்தினான்.டாக்டர் கேட்டார்,''நான் இன்னும் ஊசி குத்தவே இல்லையே அதற்குள் ஏன் அலறுகிறாய்?''சிறுவன் சொன்னான்,''என் கால் மீது உங்கள் பூட்ஸ் அழுத்திக் கொண்டிருக்கிறது.''
**********
டாக்டர்,:இன்று எப்படி இருக்கிறீர்கள்?
நோயாளி:இன்னும் மூச்சு விட சிரமமாய்த்தான் இருக்கிறது,டாக்டர்.
டாக்டர்:பரவாயில்லை,இன்று அதை நிறுத்தி விடுவோம்.
**********
நர்ஸ்:டாக்டர்,பத்தாம் நம்பர் பெட்டில் உள்ள நோயாளிக்கு இரண்டு விதமான இதயத் துடிப்பு கேட்கிறதே?
டாக்டர்:நல்ல வேலை,என் வாச்சை எங்கே வைத்தேன் என்று தேடிக் கொண்டிருக்கிறேன்.
**********
''பண விசயத்தில் எனக்கு மிகுந்த கவலையாய் இருக்கு டாக்டர்,''
'இது மாதிரித்தான் போன வாரம் ஒருவர் வந்தார்.அவர் ஒரு தையற்காரருக்குப் பணம் கொடுக்க முடியாமல் போய்,அதனால் கவலைப் படுவதாகக் கூறினார்.நான்,அதை நினைவில் வைத்துக்கொண்டு இராமல் மறந்து விடச் சொன்னேன்.இப்போது அவருக்கு நன்றாயிருப்பதாகக் கூறினார்.'
''எனக்கு அது தெரியும்,டாக்டர்.''
'எப்படி?'
''நான் தான் அந்த தையற்காரர்.''
**********
|
|
Post a Comment