ஹைக்கூ கவிஞர் பாஷோ,ஒரு வசந்த காலத்தில்,மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு மலைப் பிரதேசத்திற்குச் செல்ல நினைத்து,தன பயணத்தைத் துவங்கினார்.செலவுக்குத் தேவையான பணத்தையும் எடுத்தக் கொண்டார்.போகும் வழியில் ஒரு கிராமத்தில்,தன பெற்றோரை பக்தி சிரத்தையுடன் கவனித்துக் கொள்ளும் ஒரு ஏழை விவசாய வீட்டுப் பெண்ணைப்பற்றிக் கேள்விப்பட்டார்..அவளுடைய நடவடிக்கைகளை நேரில் பார்த்து மிக ஆனந்தம் அடைந்தார்.அந்தப் பெண்ணிடம் தான் கொண்டு வந்த பணம் அவ்வளவையும் கொடுத்துவிட்டார்.மலர்க் காட்சியைக் காணாது ஊருக்குத் திரும்பிய அவர் தன நண்பர்களிடம் சொன்னார்,''இந்த ஆண்டு மலர்களைக் காட்டிலும் இறைவனின் சிறந்த ஒரு படைப்பைக் கண்டேன்.''
|
|
Post a Comment