உன் கையிலுள்ள ஒட்டு ஒரு யோக்கியனுக்கு விழுந்தால்,உன் எதிர் காலம் காப்பாற்றப்படும்;ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால் அவனுடைய எதிர் காலம் காப்பாற்றப்படும்.
**********
ஒரு நடிகையின் கணவனாக இருப்பதில் உள்ள மதிப்பு என்ன?சிங்கம் மார்க் பிடியிலே சிங்கத்துக்கு என்ன மதிப்போ,அவ்வளவு மதிப்பு அவனுக்கும் உண்டு.பீடியை யார் பிடித்தால் என்ன,லேபல் சிங்கம் தானே!
**********
வெற்றியிலே நிதானம் போகிறது;அதோடு வெற்றியும் போய் விடுகிறது.
**********
தலைவர்கள் ஜனங்களை ஏமாற்றுவதற்குப் பெயர் ராஜதந்திரம்;ஜனங்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்வதற்குப் பெயர் ஜனநாயகம்.
**********
சருமம் பளபளப்பாக இருந்தால் உடம்பிலே நோய் இல்லை என்று பொருளல்ல.தட்டிக் கொடுப்பவர்கள் எல்லாம் அன்புள்ளவர்கள் என்றும் பொருளல்ல.
**********
உலகத்திலுள்ள எல்லோரும் யோக்கியர்களே!எப்போது?தூங்கும் போது!
**********
இரண்டு பக்கமும் கூர்மையாய் உள்ள கத்தியை ஜாக்கிரதையாகக் கையாள வேண்டும்;எந்தப் பக்கமும் சேரக் கூடிய மனிதர்களிடம் ஜாக்கிரதையாகப் பழக வேண்டும்.
**********
அடுத்தவனுக்கு ஆறுதல் சொல்லும் போது இருக்கும் தைரியம் ,தனக்குத் தேவைப்படும் போது அடுத்தவனிடம் போய்விடுகிறது.
**********
பாத்திரத்தின் நிறமல்ல,பாலின் நிறம்;ஆத்திரத்தின் நிறமல்ல அறிவின் நிறம்.
**********
விஷ்கியைக் குடித்தவன் தான் ஆட வேண்டும்;விஸ்கி பாட்டிலே ஆடக்கூடாது.நம்மைப் பிறர் தான் புகழ வேண்டும்,நாமே புகழக்கூடாது.
**********
குடித்திருப்பவரோடு விவாதம் செய்தால் ,உங்களில் யார் குடித்திருப்பவர் என்பது தெரியாது
**********.
|
|
Post a Comment