புகழ் என்பது நம் செயல்களின் எதிரொலி.
**********
கருமியின் நெஞ்சம் சாத்தானின் இருப்பிடம் .
**********
நோய் வரும்வரை உண்பவன் உடல் நலமாகும் வரை உண்ணாதிருக்க வேண்டிவரும்.
**********
அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது.
**********
நன்றி மறத்தலில் எல்லா கெட்ட குணங்களும் அடங்கும்.
**********
முட்டாள் தனக்கே முகஸ்துதி செய்துகொள்வான்.
**********
நெருக்கமான பழக்கம் முதலில் அன்பை உண்டாக்கும்.முடிவில் வெறுப்பை வளர்க்கும்.
**********
நம்மிடம் எதுவும் இல்லை என்று நினைப்பது ஞானம்.
நம்மைத்தவிர எதுவும் இல்லை என்று நினைப்பது ஆணவம்.
**********
முதல் குற்றத்தை சரி என்று சாதிப்பவன்
இரண்டாவது குற்றத்தையும் செய்தவனாகிறான்.
**********
அன்பில்லாத இடத்தில் முகங்கள் வெறும் படங்கள்;பேச்சுக்கள் வெறும் கிண்கிணி ஓசைகள்.
**********
முட்டையைக் கொடுத்து காசு வாங்குபவன் வியாபாரி.
காசைக் கொடுத்து முட்டையை வாங்குபவன் சம்சாரி.
எதையும் கொடுக்காமல் எல்லாம் வாங்குபவன் அரசியல்வாதி.
**********
எப்படியும் செய்ய வேண்டிய ஒரு செயலை புன்முறுவலுடன் செய்வதற்குப் பெயர்தான் ஒத்துழைப்பு.
**********
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
ஒரு பொய்யை ஒருவர் சொன்னால்,அது பத்தாயிரம் உண்மைகளாக மாறி வெளி வரும் என்கிறார் கோக்கி என்ற ஜென் ஞானி .பொதுவாகப் பொய்க்குக் கவர்ச்சி அதிகம்.நீங்கள் காலையில் ஒரு பொய் சொன்னால் மாலைக்குள் அது பல விதங்களில் பரவி திரும்ப உங்களிடமே வந்துவிடும்.அப்போது அது உண்மையா,பொய்யா என்று நீங்களே சந்தேகப்பட ஆரம்பித்து விடுவீர்கள்.நீங்கள் அதை உண்மை என்று நம்ப அனேக சாத்தியக் கூறுகள் உள்ளன.அதே சமயம் நீங்கள் ஒரு உண்மையைச் சொன்னால் அதை யாரும் எளிதில் நம்பமாட்டார்கள்.உனக்கு அது எப்படித் தெரியும் என்று சந்தேகத்தோடு கேட்பார்கள்.இதற்கு வாயை மூடிக் கொண்டிருப்பதே நலம்.'இந்த உலகம் பொய்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது.பொய் மிகவும் மேம்போக்கானது.அது உங்களிடம் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.அதைப்பற்றிப் பேசுவது ஒரு பொழுதுபோக்கு.ஆனால் உண்மை அப்படி அல்ல.பல அபாயங்களைச் சந்திக்க நேரிடும்.பொய்மை வெகுமதியைக் கொடுக்கிறது.
**********
தன்னோடு வளரும் தனித்தன்மை உடையவரை இந்த உலகம் எளிதில் புகழாது.அங்கீகரிக்காது.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களை வேண்டுமானால் பல கட்டுக் கதைகளைக் கட்டி,அற்புதங்களைக் கூட்டிப் புகழலாம்.அந்த மனிதன் ஒரு அவதாரப் புருசனாகக் கருதப்படலாம்.
**********
மக்களுக்கு ஆறுதல் தேவைப்படுகிறது.தன்னை யாரோ ஒரு கடவுளின் தூதன் வந்து காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் ஆறுதல் அடைகிறார்கள்.இது ஒரு நாகரீகமற்ற அடிமைத்தனம்.
**********
ஒவ்வொரு நோய்க்கு நம் உடலில் வெவ்வேறு உறுப்புகள் பாதிக்கப்படுகின்றன.
காச நோய் ----------நுரையீரல் மற்றும் எல்லா உறுப்புகளும்
போலியோ----------நரம்பு மண்டலம்
ரேபிஸ்---------------மூளை,நரம்பு மண்டலம்
ரிக்கெட்ஸ்----------எலும்புகள்
ஸ்கர்வி--------------பல் ஈறுகள்
மஞ்சள் காமாலை-கல்லீரல்
சர்க்கரை நோய்----சிறு நீரகம்,ரத்த நாளங்கள் மற்றும் அனைத்து உறுப்புகளும்
வாதம் ---------------கை கால்கள்
யானைக்கால் -----கால்கள்
கலுத்துக்கழலை -தைராயிட் சுரப்பிகள்
எய்ட்ஸ் -------------உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு முறை
லுகேமியா----------இரத்த அணுக்கள்
பயோரியா---------பல் ஈறுகள்
புரைநோய் --------கண்கள்
நம் தோலில் பாதம்,உள்ளங்கை முதலிய இடங்களில் தொடு உணர்வு செல்கள் அதிகம் உள்ளன.இவை தம் மேற்போர்வையை இழந்து காணப்படுவதால் குறைந்த பட்ச உணர்வுத் தூண்டுதல்களையும் துல்லியமாகக் கடத்தும் திறன் பெற்றிருக்கின்றன.எனவே இந்தத் தொடு செல்கள் மிகுந்த பாதம் முதலிய பாகங்களை லேசாக வருடினால்கூடக் கூச்சம் ஏற்படுகிறது.
**********
நமக்கு சளி பிடிக்கும்போது மூக்கிலுள்ள mucus membrane வைரஸ் கிருமிகளால் பாதிக்கப்படும்.அந்த வைரஸ் கிருமிகளை அழிக்க mucus membrane நிறையத் தண்ணீரை நமது இரத்தம் மற்றும் வெள்ளை அனுக்களிடம் இருந்து உற்பத்தி செய்யும்.இந்தத் தண்ணீர் வைரஸ் கிருமிகளைத் தாக்கும்.இதனால்தான் நமக்கு சளி பிடித்தால் மூக்கில் தண்ணீராய் வடிகிறது.
**********
புரோட்டின் என்பது கார்பன்,ஹைட்ரஜன் ,நைட்ரஜன்,ஆக்சிஜன்,சல்பர் ஆகியவற்றின் கலவையாகும்.இந்த வார்த்தை கிரேக்கத்திலிருந்து வந்தது.அதன் பொருள் அடிப்படை .
**********
சிங்கம்
*பிற விலங்குகளைப் பதுங்கி இருந்து கொல்லாது
*எதற்கும் நடுங்கி வாழ்வது இல்லை.
*எப்போதும் கம்பீரமாக அஞ்சாது நடக்கும்.
*இரையை களவாடியோ வஞ்சகமாகவோ அடையாது.
*பசி வரும்போது தன் வரவை கர்ஜனை மூலம் அறிவித்துவிட்டே இரை தேட வரும்.
*பசி இல்லாதபோது சிறு உயிரைக்கூட கொல்லாது.
*நாளைக்கு வேண்டும் என்று இரையை பதுக்கி வைக்காது.
பின் ஏன் நமது அரசியல் வாதிகளை சிங்கத்துடன் ஒப்பிடுகிறார்கள்?
புத்தர் ஒரு முறை தன் சீடர்களுடன் ஒரு அரண்மனைக்கு சென்று உபதேசங்கள் புரியலானார்.அரண்மனையில் வேலை செய்தவர்கள் அவருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தனர்,''அய்யா,நீங்கள் முற்றும் துறந்த
முனிவர்.தவசீலர்களான உங்களுடைய சீடர்களுக்கு உங்கள் உபதேசங்களைப் பின்பற்றுவது எளிது.இல்லறத்தில் முழுமையாக ஈடுபட்டு வரும் எங்களுக்கு அது எளிதாக இல்லை.எங்கள் தகுதிக்கேற்ப எளிதான உபதேசங்களைக் காட்டுங்கள்.''புத்தர் அதை ஏற்றுக் கொண்டு உபதேசித்தார்,''நாம் நம் செயல்களுக்கு மனதையும் உடலையும் பயன்படுத்துகிறோம்.இரண்டும் ஒருவருக்கு ஆரோக்கியமாக இருந்தால்தான் அவர் நலமுடன் இருக்கிறார் என்று பொருள்.நாம் நமது உடலை அசைத்துப் பயன்படுத்தும்போது உடல் பலம் பெறுகிறது.ஆரோக்கியம் பெறுகிறது.ஆனால் அசைவற்றிருக்கும்போதுதான் நமது மனம் பலம் பெறுகிறது.எனவே உடலை அசைத்தும்,மனதை அசைவற்றும் வைத்திருந்தால் உங்கள் உடலும் மனமும் ஆரோக்கியமாக இருக்கும்.''
சுபி ஞானிகளைப் பற்றி ஒருவன் தரக் குறைவாக விமரிசித்து வந்தான்.இதைக் கேள்விப்பட்ட ஞானி ஒருவர் அவனை அழைத்து தன் கையிலிருந்த மோதிரத்தை அவனிடம் கொடுத்து ,''இதைக் கடைத்தெருவுக்கு எடுத்துச் சென்று ஆயிரம் ரூபாய்க்கு விற்று வா,''என்றார்.அவனும் வீட்டு உபயோகப் பொருட்கள் விற்கும் கடை வீதிக்கு எடுத்து சென்று அதை விற்க முயற்சி செய்தான்.ஒருவரும் ஆயிரம் ரூபாய் கொடுத்து அதை வாங்கத் தயாராக இல்லை.நொந்து போய் அவன் ஞானியிடம் சென்று ,''இந்த மோதிரத்தை நூறு ரூபாய்க்குக் கூட யாரும் வாங்கத் தயாராயில்லை,''என்றான்.உடனே ஞானி,''பரவாயில்லை,இதை தங்க நகைக் கடைத் தெருவுக்கு எடுத்துச் சென்று என்ன விலை கேட்கிறார்கள் என்பதை அறிந்து வா,''என்றார்.அவனும் அவ்வாறே சென்று ஒரு கடையில் அம்மோதிரத்தைக் கொடுத்து எவ்வளவு தர முடியும் என்று கேட்டான்.கடைக்காரன் ஒரு லட்ச ரூபாய் தர முடியும் என்று கூற மகிழ்ச்சியுடன் அவன் வந்து ஞானியிடம் சொன்னான்.ஞானி இப்போது அவனிடம் அமைதியாக சொன்னார்,''இந்த மோதிரத்தின் மதிப்பை எந்த அளவுக்குக் கடை வீதியில் இருப்பவர்கள் அறிந்திருந்தார்களோ அந்த அளவே நீயும் சுபி ஞானிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கிறாய்.நீ என்று நகை வியாபாரியின் தரத்துக்கு வரப்போகிறாய்?''



0