குரு ஒருவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார்.கண் விழித்தபோது எதிரே ஒரு மனிதர் அமர்ந்திருப்பதைக் கண்டார்.வந்தவர்,''ஐயா,நான் ஒரு புகழ்பெற்ற மடாலயத்தலைவர்.அந்த மடத்தைப் பற்றி நீங்கள் கூடக் கேள்விப் பட்டிருப்பீர்கள்.எங்கள் மடம் மிகப் பழமையானது எங்கள் மடத்தைத் தேடி உலகம் முழுவதிலிருந்தும் பலர் வந்த வண்ணம் இருப்பார்.சமீப காலத்தில் இந்த எண்ணிக்கை குறைய ஆரம்பித்து விட்டது.இதற்குக் காரணம் எங்கள் மடத்திலுள்ள பிக்குகளுக்கிடையே ஒற்றுமை கிடையாது.யார் பெரியவர் என்ற போட்டிதான் உள்ளது.இந்தப் பிரச்சினையிலிருந்து மடத்தை மீட்டுப் பழைய நிலைக்குக் கொண்டு வர என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்கத்தான் உங்களிடம் வந்தேன்,''என்றார்.அவர் குரலில் தென்பட்ட வேதனையைக் கண்ட குரு சொன்னார்,''இந்த நிலைமைக்கு அறியாமைதான் காரணம்,''வந்தவர்,''அறியாமையா?''என்று வியப்புடன் கேட்டார்.குரு சொன்னார்,''உங்கள் பிக்குகளுக்கிடையே ஒரு இறைத்தூதர் இருக்கிறார்.அவரை நீங்கள் அறியவில்லை.அதை அறிந்து கொண்டு செயல் பட்டால் உங்கள் மடம் பழைய நிலைக்கு வந்துவிடும்.''இப்படிச் சொல்லிவிட்டு குரு மீண்டும் தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.'நம்மிடையே யார் இறைத்தூதர்?''என்ற கேள்வி மனத்தைக் குடைய அவர் மடத்துக்கு வந்து பிக்குகள் அனைவரையும் அழைத்து விபரம் சொன்னார்.இதைக் கேட்டவுடன் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.அவநம்பிக்கையுடனும்,அதே சமயம் பயம் கலந்த சந்தேகத்துடனும் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள ஆரம்பித்தனர்.''யார் அந்த இறைத்தூதர்?''என்ற கேள்விதான் அங்கு ஒரே பேச்சு.யாரையும் குறிப்பிட்டு சொல்ல முடியாத நிலையில்,அவராக இருக்குமோ,இவராக இருக்குமோ என்று எண்ணி ஒவ்வொருவரும் அடுத்தவர்களிடம் மிக மரியாதையாகவும் பணிவுடனும் நடந்து கொள்ள ஆரம்பித்தனர்.விளைவு?மடாலயம் மகிழ்ச்சி நிரம்பியதாயிற்று.மடத்திற்கு வந்தவர்கள் அங்கு நிலவும் மகிழ்ச்சியான சூழ்நிலையை மற்றவர்களுக்கு சொல்ல,இப்போது மடம் முன்பு இருந்ததைக் காட்டிலும் சிறந்த பேருடன் சிறப்பாக விளங்கியது.அங்கே ஆன்மீகமும் புகழும் போட்டிபோட்டு வளர்ந்தன.மடாலயத் தலைவர் இப்போது ஒன்றினைப் புரிந்து கொண்டார்.இறைத்தூதர் நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒளிந்துள்ளார்!
|
|
அப்பொ நபி இறை தூதர் இல்லியா...????