ஆங்கிலத்தில் சிட்டி என்றும் டவுன் என்பதையும் தமிழில் நகரம் என்றே அழைக்கிறோம்.சமீப காலமாக சிட்டியை மாநகரம் அழைக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.சிட்டிக்கும் டவுனுக்கும் என்ன வித்தியாசம்?ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் தொகை உள்ள ஊர் சிட்டி என்றும் ஐந்தாயிரத்திலிருந்து ஒரு லட்சம் வரை மக்கள் தொகையிருந்தால் அதை டவுன் என்றும்
கூறப்படுகிறது.சிட்டி,டவுன் என்பவை இடங்களைத்தான் தற்போது குறிக்கின்றன..ஆனால் ஆரம்ப காலத்தில் கிரீசிலும் ரோமாபுரியிலும் சிட்டி என்ற சொல் வேறு அர்த்தத்தில் உபயோகப்படுத்தப்பட்டது.சிவிட்டாஸ் என்ற லத்தீன் மொழியின் வார்த்தையிலிருந்துதான் சிட்டி என்ற சொல் உருவானது.முற்காலத்தில் கிரீசிலும் ரோமாபுரியிலும் பல குடும்பங்கள் ஒன்று சேர்ந்து ஓரிடத்தில் வாழ்ந்தன.இந்தக் குடும்பத்தினர் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுடைய உள்நாட்டு வெளிநாட்டு விவகாரங்களைக் கவனித்துக் கொள்ளக்கூடிய அளவுக்குப் பூரண சுதந்திரம் பெற்றிருந்தார்கள்.இப்படிப்பட்ட ஒரு மக்கள் சமுதாயமே சிட்டி என்று அழைக்கப்பட்டது.ஒவ்வொரு சிட்டியும் ஒவ்வொரு ராஜ்யமாக இருந்தது.
சிட்டி என்பதற்கு அரிஸ்டாட்டில் கூறும் விளக்கம்;
''கூடிய வரையில் மகிழ்ச்சியுடனும் சுதந்திரத்துடனும் இருக்கும் பொருட்டு மக்கள் பலர் .தங்கள் குடும்பத்தோடு பிற குடும்பத்தினருடன் ஒருவருக்கொருவர் பரஸ்பர சம்மதத்தின் பேரில் வசிப்பதற்குத்தான் சிட்டி என்று பெயர்.''சிட்டியின் நோக்கம் மக்கள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்என்பதே.இதற்காகவே பல திருவிழாக்கள் ஏற்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டன.
|
|
மக்கள் மகிழ்ச்சியுடன் இருந்தால் சரி...