முருகப் பெருமானை மனதில் வணங்கி எத்தனையோ புலவர்கள் எவ்வளவோ பாடல்களை மனம் உருகிப் பாடியுள்ளனர்.காளமேகப் புலவர் வித்தியாசமாய் முருகனைப் பாடியிருக்கிறார் பாருங்கள்.
''அப்பன் இரந்துண்ணி ஆத்தாள் மலைநீலி
ஒப்பறிய மாமன் உறிதிருடன் -சப்பைக்கால்
அண்ணன் பெருவயிறன் ஆறுமுகத்தானுக்கிங்
கென்னும் பெருமை இவை.''
முருகனுக்கு என்னென்ன பெருமைகள் உள்ளன என்று பாருங்கள்!தந்தையோ பிச்சை எடுத்து உண்பவன்.தாயோ மலையில் வாழும் நீலி.தாய் மாமனோ உறியிலிருந்து வெண்ணையைத் திருடி உண்பவன்.அண்ணன் விநாயகனோ,சப்பைக்கால்களுடன் பெரிய வயிறையும் உடையவன்.
காளிமேகப் புலவரின் கிண்டலுக்கு முருகன் கூடத் தப்பவில்லை.
|
|
கலக்கல் தான்....