நிலவு தேய்வதனால் கூட வானம் வருந்துவதில்லை.
பூக்கள் உதிர்வதனால் கூட கொடி காய்வதில்லை.
மனிதனே!
நீ மட்டும் ஏன் சிறு இழப்புக்கெல்லாம் வருத்தம் கொள்கிறாய்?
******
செத்துப்போன
வண்ணத்துப்பூச்சியை
சுமந்தபடி எறும்புகள்.
பிணத்தைச் சுமக்கும் கவலையுமில்லை.
விருந்தை சுமக்கும் கர்வமும் இல்லை அவைகளுக்குள்.
******
ஒரு கைத்தடி
பார்வை இழந்தவனுக்குக் கண்ணாக இருக்கிறது.
கால் இழந்தவனுக்கு பார்வையாக இருக்கிறது.
மனிதா,
நீ அந்தக் கைத்தடியை விடத் தாழ்ந்தவனா?
*****
--ரசித்த புதுக் கவிதைகள்.
|
|
டியர் சார் ;நீங்கள் ரசித்த புதுக் கவிதைகளை நானும் ரசித்தேன் .எழுதிய கவிஞர்களின் பெயரையும் சொன்னால் மேலும் ரசிக்க முடியுமே !
நண்பரே,இது எப்போதோ படித்தது.அதை எழுதியவர் யார் என்று ஞாபகம் இல்லை.