மன்னன் ஒருவன் தனது அவையில் இருந்த அனைத்து புலவர்களையும் வரவழைத்து,''நான் நாற்பது நாள் தருகிறேன்,அதற்குள் நீங்கள் எல்லோரும் சேர்ந்து நாலு கோடி பாடல்கள் இயற்ற வேண்டும்.முடித்தால் பரிசு, இல்லையேல் தண்டனை,''என்றான்.புலவர்கள் எவ்வளவோ முயன்றும் ஒரு லட்சம் பாடல்கள் கூட இயற்ற முடியவில்லை.இன்னும் ஒருநாள்தான் இருந்தது.என்ன செய்வதென்று புரியாதிருந்தபோது ஔவையார் அங்கு வந்தார்.விசயத்தைக் கேள்விப்பட்ட அவர்,''இதைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம்,நான் பார்த்துக் கொள்கிறேன்,''என்று கூறிவிட்டு படுக்க சென்று விட்டார்.
மறுநாள் புலவர்கள் அவையில் கூடினர்.மன்னர் வந்ததும் ஔவையார் தானே நாலு கோடி பாடல் பாடப் போவதாகக் கூறிவிட்டு வரும் பாடலைப் பாடினார்.
''மதியாதார் தலைவாசல் மதித்தொரு கால்சென்று மிதியாமை கோடியுறும்.
உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை
கோடியுறு ம்
கோடி கொடுத்தும் குடிப் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடியுறும்
கோடானுகோடி கொடுப்பினும் தன்னுடைய நா கோடாமை கோடியுறும்,''
இதுதான் நாலு கோடிப் பாடல்'' என்று ஔவையார் சொன்னபோது அதை மறுக்க முடியாத மன்னன் வாக்களித்தபடி ஒளவைக்குப் பரிசுகள் கொடுத்து மரியாதை செலுத்தினான்.
|
|
அட...
அருமை ஐயா... நன்றி...
தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டி...
விளக்கம் : http://dindiguldhanabalan.blogspot.com/2013/12/Pongal-Special-Article-Contest.html