சங்க கால நூல்களில் முக்கியமானது.எட்டுத்தொகை.பல்வேறு சமயங்களில் பல்வேறு புலவர்கள் பாடிய பாடல்கள்அறிஞர்களின் உதவியால் தொகுக்கப் பட்டவை.இந்நூல்கள் அகத்தைப் பற்றியும்,புறத்தைப் பற்றியும் கூறுவனவாக உள்ளன.
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு
ஒத்த பதிற்றுப் பத்தோங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ டகம்புறமென்
றித்திறந்த எட்டுத்தொகை.
நற்றிணை:அகப்பொருளில் திணை வகையை சேர்ந்த நூல்.175 புலவர்கள் பாடிய 400 பாக்கள் உள்ளன.உவமை அழகுக்கு இந்நூல் சிறந்த எடுத்துக் காட்டாகும். இந்நூலைத் தொகுப்பிக்க உதவி செய்தது,பன்னாடு தந்த பாண்டியன் மாறன் வழுதி என்பவராகும்.
குறுந்தொகை:இதனைத் தொகுத்தவர் பெயர் பூரிக்கோ.டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் அவர்கள் உரை எழுதியுள்ளார்.இந்நூலின் 400 பாடல்கள் 206 புலவர்களால் பாடப்பட்டவை.'கொங்குதேர் வாழ்க்கை'என்று துவங்கும் பாடல் இதில் தான் உள்ளது.
ஐங்குறுநூறு:இந்நூல் அகப்பொருள் தழுவியது.பொருட்களின் இயற்கையையும்,தமிழின் இன்சுவையையும் இதன் கண் அறியலாம்.இதனைத் தொகுத்துத் தந்தவர் புலத்துறை முற்றிய கூடலூர் கிழார் ஆவார்.சில பாடல்கள் இந்நூலில் தற்போது காணப்படவில்லை.
பதிற்றுப்பத்து.சேர மன்னர்கள் பத்துப் பேரைப் பற்றி ஒவ்வொருவருக்கும் பத்துப் பாடல்கள் பாடப் பட்டிருப்பதால் இப்பெயர்.இந்நூல் புறப்பொருள் பிரிவை சேர்ந்தது.
பரிபாடல்.பரிபாடல் என்பது பரிந்து வருவது.இது இசைப்பாட்டு என்றும் கூறப்பட்டது.இன்பத்தைப் பொருளாகக் கொண்டது.மொத்தப் பாடல்கள் 70 இந்நூலில் காணப்படும் பாடல்களைப் பாடியவர்கள் 13 பேர்.இந்நூலுக்கு உரை கண்டவர் பரிமேல் அழகர்.மதுரையின் மாண்பை விளக்கும் பாடல்கள் இடம் பெற்றுள்ளன.
கலித்தொகை:இது அகப்பொருள் தழுவிய நூல்.இதனைத் தொகுத்தவர் அறிஞர் நல்லந்துவனார்.
அகநானூறு:இந்நூல் நெடுந்தொகை என்றும் கூறப்படும்.பாடல்களை 145 பேர் எழுதியுள்ளனர்.இந்நூலைத் தொகுக்க உதவியது உக்கிரப் பெருவழுதிப் பாண்டியன்.தொகுத்தது மதுரை உப்பிரிகுடிகிழார் உருத்திரசன்மர் ஆவார்.இயற்கை வர்ணனைகள் மிகுதியாக உள்ளன.
புறநானூறு.:இந்நூலில் அமைந்த உவமைகள் சுவையும் பொருத்தமும் உடையன.இது தமிழ்நாடு,தமிழ் மக்களின் பண்டைய நிலை,சிறந்த நாகரீகம்முதலானவற்றை உணர்த்தும் தலை சிறந்த நூல்.
|
|
Post a Comment