தையல் கடை வைத்திருக்கும் தன நண்பனிடம் ஒருவன் தன சட்டையைத் தைத்துக் கொடுக்கச் சொல்லி வந்தான்.தையல் கடைக்காரன் சொன்னான், ''நான் எல்லோரிடமும் ஒரு சட்டை தைக்க இருநூறு ரூபாய் வாங்குகிறேன்.ஆனால் நீ என் நண்பன் அல்லவா?அதனால் நூற்றி ஐம்பது ரூபாய் கொடு போதும்,''.நண்பன் சொன்னான்,''நான் வழக்கமாக என் சட்டையைத் தைப்பதற்கு எழுபது ரூபாய் தான் கொடுப்பேன்.ஆனால் நீ என் நண்பன் அல்லவா?அதனால் நான் நூறு ரூபாய் தருகிறேன்,''வேறு வழியின்றி தையற்காரனும் சம்மதித்தான்.
**********
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவனுக்கு ஆதரவாக அவன் மனைவி நீதி மன்றத்தில் சாட்சி கூற வந்தாள்.அந்தப் பெண் விபசாரத்தைத் தொழிலாகக் கொண்டவள்.அவள் சாட்சியத்தில் கொலை நடந்ததாகக் கூறப்படும் அன்று இரவு தன கணவர் தன்னுடன் வீட்டில் இருந்ததாகக் கூறினாள்.கொலை நடந்த இடமோ விபச்சார விடுதி.அரசுத் தரப்பில் ஆஜரான முன்னணி வக்கீல் அந்தப் பெண்ணிடம்,,''அன்று இரவு தொழில் செய்யும் இடத்துக்கு நீ போகவில்லையோ?''என்று கிண்டலாகக் கேட்டார். அதற்கு அவள்,''நான் பகலில்தான் என் தொழிலை
செய்வேன்,''என்றாள்.அதற்கு வக்கீல்,''அது எப்படி?உன் வாடிக்கையாளர்கள் இரவில்தானே வருவார்கள்?''என்று சீண்டினார்.அதற்கு அந்தப் பெண் நிதானமாகப் பதில் கூறினாள்,''திருடர்களும் பொறுக்கிகளும்தான் இரவில் போவார்கள்.உங்களைப்போல கௌரவமானவர்கள் பகலில்தான் வருவார்கள்.''
**********
|
|
Post a Comment