''கடவுளே,என்னிடம் பேச மாட்டாயா?''என்று ஒருவன் நெக்குருக வேண்டினான்.அப்போது அவன் அருகில் ஒரு குயில் கூவிற்று.ஆனால் அதை அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,என்னிடம் நீ பேச மாட்டாயா?''என்று இப்போது அவன் உரத்த குரலில் கத்தினான்.அப்போது வானத்தில் பலத்த இடியோசை கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,,உன்னை நான் உடனடியாகப் பார்க்க வேண்டும்,''என்று இப்போது அவன் வேண்டினான்.அப்போது வானில் ஒரு தாரகை சுடர்விட்டுப் பிரகாசித்தது.அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,எனக்கு ஒரு அதிசயத்தைக் காட்டு,''என்று பிரார்த்தனை செய்தான். அப்போது அருகில் ஒரு குழந்தை பிறந்து அழும் சப்தம் கேட்டது.அதையும் அவன் கவனிக்கவில்லை.
''கடவுளே,நீ இங்கு என் அருகில் இருக்கிறாய் என்பதை நான் தெரிந்து கொள்ள என்னை நீ தொட வேண்டும்,''என்று கூவினான்.அப்போது அவன் தோளில் ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி வந்து அமர்ந்தது. அவன் அதை கையால் அப்புறப்படுத்தினான்.
கடவுள் நம்மைச் சுற்றி சிறிய எளிமையான விசயங்களில் இருக்கிறார்.எனவே அந்த அருட்கொடையை தவற விட்டு விடாதீர்கள்.ஏனெனில் கடவுள் நீங்கள் எதிர் பார்க்கும் வடிவில் வருவார் என்று எதிர் பார்க்காதீர்கள்.
உங்களை வரவேற்கிறேன்
இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!
ஒரு அடர்ந்த காட்டில் ஒரு வகை அபூர்வமான வைரக்கல் இருப்பதாகக் கேள்விப்பட்ட ஒருவர் அதை எப்படியும் தேடிக் கண்டு பிடிக்க வேண்டும் என்று புறப்பட்டார்.அவர் முடிவினைத் தெரிந்த அவர் நண்பர்கள் சொன்னார்கள்,''உனக்கேன் இந்த வீண் வேலை?இது ஒரு பெரிய காடு.மிருகங்கள் நிறைய உண்டு.இதில் உள்ளே செல்வதே சிரமம்.அதிலும் இந்த வைரக்கல் எங்கு இருக்கும் என்று தேடிக் கண்டு பிடிப்பது எளிதல்ல. ஊண் உறக்கமின்றி தேடினாலும் கிடைக்க மாதக் கணக்கில் ஆகலாம்.ஒரு வேலை கிடைக்காமல் போனாலும் போகலாம்.''இதைக் கேட்டபின்னும் அவர் தன முயற்சியைக் கை விடவில்லை.காட்டினுள் சென்றார்.அதிர்ஷ்டவசமாக உள்ளே சென்ற சிறிது நேரத்திலேய அவருக்கு வைரக்கல் தென்பட்டது.அதைக் கையில் எடுத்துப் பார்த்தார்.அவருக்கு நண்பர்களின் எச்சரிக்கை ஞாபகம் வந்தது.அவர்,''இவ்வளவு எளிதில் கிடைத்தால் இது வைரக்கல்லாக இருக்காது,''என்று சொல்லியவாறு அதை வீசி எறிந்துவிட்டு காட்டுக்குள் மேற்கொண்டு தேடுவதற்கு விரைந்தார்.
இப்படித்தான் நாம் ஒவ்வொரு விசயத்திலும் முன் சிந்தனைகளாலும் எதிர்பார்ப்புகளாலும், கிடைக்கும் அறிய பல வாய்ப்புகளை இழக்கிறோம்.
ஒரு பெரிய நிறுவனத்தின் தலைவர்,ஓய்வு பெற ஓராண்டு இருக்கையில் தனக்குப்பின் நிறுவனத்தை நடத்த ஒருவரைத் தேர்ந்தெடுக்க விரும்பினார்.அவர் தன மகனையோ.அடுத்து இருந்த மூத்த அதிகாரிகளையோ தலைவராக விரும்பவில்லை.எனவே அவர் துவக்க நிலையில் இருந்த இளம் அதிகாரிகள் பத்துப் பேரை அழைத்து சொன்னார்,''அடுத்த ஆண்டு உங்களில் ஒருவர்தான் இந்த நிறுவனத்தின் தலைவர்.''இளைஞர்களுக்கு ஒரே திகைப்பு.தொடர்ந்து அவர் சொன்னார்,''நான் இன்று ஒவ்வொருவருக்கும் ஒரு விதை கொடுப்பேன்.அதை நீங்கள் எடுத்துச்சென்று நன்றாக வளர்த்து ஒரு ஆண்டு கழித்து இங்கு கொண்டு வர வேண்டும்.அதைப் பார்த்து நான் ஒருவரை தேர்வு செய்வேன்.''
அனைவரும் மகிழ்வுடன் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட விதைகளுடன் தங்கள் வீட்டுக்கு சென்றனர்.அவர்களில் முருகன் என்பவன் வீட்டிற்கு சென்றவன் தன் மனைவியிடம் விபரத்தை சொல்ல அவளும் அவன் உதவிக்கு வந்தாள்.ஒரு தொட்டியை எடுத்து மண்ணிட்டு உரமிட்டு அதில் விதைத்தார்கள்.தொடர்ந்து தண்ணீரும் ஊற்றி வந்தனர்.ஆனால் என்ன காரணத்தாலோ விதை முளைக்கவில்லை.ஒரு ஆண்டு முழுவதும் பல முயற்சி செய்தும் ஒரு பயனும் இல்லை.
குறிப்பிட்ட நாள் வந்தது.அவனுக்கு மிகுந்த வருத்தம்.ஆனால் அவன் மனைவி,''நீங்கள் இன்று வெறும் தொட்டியையே எடுத்துச்சென்று வளரவில்லை என்ற உண்மையை சொல்லி விடுங்கள்.என்ன ஆனாலும் அதை ஏற்றுக் கொள்வோம்,''என்று சொல்ல அவனும் அவ்வாறே செய்தான்.அலுவலகம் சென்றபோது அவன் நண்பர்கள் அனைவரும் அழகழகான செடிகளைக் கொண்டு வந்திருந்தனர்.இவனுடையவெறும்
தொட்டியைப் பார்த்து அனைவரும் கேலி செய்தனர்.
தலைவர் வந்தார்.எல்லாத் தொட்டிகளையும் பார்த்தார்.முருகனுக்கோ ஒரே பயம் இருக்கும் வேலையும் போய்விடுமோ?சிறிது நேரம் கழித்து தலைவர்,''உங்களது அடுத்த தலைவர் முருகன்தான்,''என்று அறிவித்தார்.ஒரே சலசலப்பு.அவரே மீண்டும் பேசினார்,''இத்தேர்வு நம்பிக்கைத் தேர்வு.நான் எல்லோருக்கும் கொடுத்த விதைகள் அவிக்கப்பட்டவை.எனவே அவை முளைப்பதற்கு வாய்ப்பே இல்லை.எல்லோரும் வேறு விதைகளை வளர்த்து இங்கே கொண்டு வந்துள்ளபோது முருகன் மட்டும் உண்மையை இங்கு கூறினான்.எனவே நம்பிக்கைக்குரிய அவனே இந்த நிறுவனத்துக்கு ஏற்ற தலைவர்.''
உண்மையான நட்புக்கு இலக்கணம் என்ன?
உண்மையான இரு நண்பர்கள் இரு கண்களைப் போல இருக்க வேண்டும்.
கண்கள் இரண்டும் ஒரே நேரத்தில் சேர்ந்தே இமைக்கின்றன
இரண்டும் ஒரே திசையில் சேர்ந்தே நகர்கின்றன.
இரண்டும் அழும்போது ஒரே மாதிரி கண்ணீர் விடுகின்றன.
இரண்டும் சேர்ந்தே ஒரு பொருளைப் பார்க்கின்றன.
இரண்டும் சேர்ந்தே தூங்குகின்றன.
ஒரு கண்ணில் அடி பட்டால் அடுத்த கண்ணும் துடிக்கிறது.
ஆனால்
அவை இரண்டும் ஒன்றை ஒன்று பார்ப்பது கூடக் கிடையாது.
இரண்டு நண்பர்கள் ஒரு ஆற்றங்கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.அப்போது ஆற்றில் ஒரு மூட்டையொன்று மிதந்து வருவது தெரிந்தது.அந்த மூட்டைக்குள் என்ன இருக்கும் என்று இருவரும் யோசித்து விவாதித்துக் கொண்டிருந்தனர்.இருவரில் ஒருவனுக்கு அதில் ஏதேனும் விலை மதிப்புள்ள பொருட்கள் இருக்க வேண்டும் என்று தோன்றியது.உடனே கொஞ்சமும் யோசியாது ஆற்றினுள் தவ்வி நீந்திச்சென்று அந்த மூட்டையைப் பிடித்தான்.அப்போதுதான் தெரிந்தது.அது மூட்டையல்ல;உயிருக்குப் போராடிக் கொண்டுயருந்த ஒரு கரடி அது என்பது..அந்தக் கரடியும் உயிர் தப்பிக்கும் எண்ணத்தில் அவனை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தது.இதை அறியாத கரையில் இருந்த நண்பன் ,''மூட்டையைக் கொண்டு வருவது சிரமமாக இருந்தால் அதை விட்டுவிடு.அதற்காக உயிரைப் பணயம் வைக்காதே,''என்றான்.அதற்கு அவன் சொன்னான்,''மூட்டையை நான் பிடிக்கவில்லை.மூட்டை தான் என்னைப் பிடித்துக் கொண்டுள்ளது.''
இதுபோல உலகப் பற்றுக்களை நாம் தான் பிடித்துக் கொண்டிருக்கிறோமே தவிர அவை நம்மைப் பிடித்துக் கொண்டு இருக்கவில்லை.
விமரிசனங்கள் உங்களைப் பாதிக்கிறதா?இக்கேள்வி கேட்கப்பட்டால் 90%பேர் ஆம் என்பார்கள்.10%பேர் அது என் வளர்ச்சிக்கு உதவுகிறது என்பார்கள்.எப்படி?
உங்களை நோக்கி ஒரு விமரிசனம் எழும்போது இறுதியில் அதற்கு மதிப்புத் தர வேண்டுமா என்று யோசியுங்கள்.பிறகு இதற்குமுன் இப்படி ஒரு விமரிசனம் நம்மை நோக்கி வந்திருக்கிறதா என்று பாருங்கள்.பலமுறை உங்களை நோக்கி வந்த விமரிசனம் அது என்றால் நீங்கள் அதற்கு உறுதியாகக் கவனம் செலுத்தியாக வேண்டும்.
உங்களை நோக்கி ஒரு விமரிசனம் எழும்போது அதை என்னவென்று ஆராயாமல் நீங்களும் உடனே உங்கள் பங்கிற்கு எதிராளியை விமரிசிக்க ஆரம்பிக்காதீர்கள்.அது மனக்கசப்பை வளர்க்கும்.
அமைதியாக இருந்து கவனியுங்கள்.என்ன செய்யலாம் என்று ஆலோசனை கேட்பது சிறந்தது.
உங்கள் மீதுள்ள பொறாமையால் எழும் வீண் விமரிசனமானால் அதைத் தூக்கி எறிந்து விடுங்கள்.
விஞ்ஞானி ஐன்ஸ்டீன் நன்றாக வயலின் வாசிப்பார்.ஒரு நாள் அவர் வயலின் வாசித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த ஒரு புகழ் பெற்ற நகைச்சுவை நடிகர் கேலியாக சிரித்துக் கொண்டிருந்தார்.
''நான் வயலின் வாசிக்கும்போது சிரிக்கிறீர்களே,நீங்கள் நகைச்சுவை வேடத்தில் நடிப்பதைப் பார்த்து நான் எப்போதாவது சிரித்திருக்கிறேனா?''என்று கேட்டார் ஐன்ஸ்டீன்.



0