உங்களை வரவேற்கிறேன்

இந்த வலைப்பூவில் நான் படித்ததில் பிடித்ததை அனைவருடனும் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இது உங்களுக்குப் பிடித்திருந்தால் அதன் பெருமை அதை எழுதியவர்களைச் சாரும்! சிறப்பாக இல்லை என்று கருதினால், அதைத் தேர்வு செய்த நான் பொறுப்பாவேன் !!!

அகங்காரம்

0

Posted on : Sunday, July 31, 2011 | By : ஜெயராஜன் | In :

உங்கள் மனைவி அழகாக இருக்கிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள்.உங்கள் மனைவி அழகு என்பதை அந்த நகரத்தில் உள்ள எல்லோரிடமும் காட்டவே விரும்புவீர்கள்.அவள் ஏதோ உங்களுக்கு சொந்தமான 'பொருள்'என்று தான் கருதிக் கொள்வீர்கள்.நீங்கள் எப்படி சிறந்த கார் வைத்திருந்தால் அதைப் பிறர் பார்த்து தன்னை மதிக்க வேண்டும் ,பாராட்ட வேண்டும் என்று கருதுகிறீர்களோ,அதைப்போல உங்கள் மனைவியைப் பார்த்து பிறர் பொறாமைப்பட வேண்டும் என்றுதான் நினைப்பீர்கள்.நீங்கள் வைர நகைகளை அவளுக்கு அளித்தால் அது அன்பினால் அல்ல.உங்களுடைய பணக்கார அகந்தையை வெளிப்படுத்துவதற்கு அவளை ஒரு சாதகமாக உபயோகப்படுத்திக் கொள்கிறீர்கள்.அவள் எப்போதும் உங்களை சார்ந்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள்.அதில் அவள் சற்று மாறுபட்டால் அவள் மீது கோபம் அடைகிறீர்கள்.அவளைக் கொன்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.ஆகவே நீங்கள் யாரைக் காதலிக்கிறீர்கள்?உங்கள் மனைவியையா அல்லது பணம் அந்தஸ்து என்ற உங்களுடைய அகங்காரத்தைக் காதலிக்கிறீர்களா?அகங்காரம் எப்போதும் தன முனைப்புடையது.தீவிர போட்டி மனப்பான்மையுடையது.

வெற்றிடம்

0

Posted on : Sunday, July 31, 2011 | By : ஜெயராஜன் | In :

கிருஷ்ணரின் மனைவி ருக்மிணி கிருஷ்ணரின் புல்லாங்குழல் மீது பொறாமை கொண்டாள்.காரணம்?குளிக்கப்போகும் சமயம் தவிர எப்போதும் புல்லாங்குழல்  கிருஷ்ணரிடம்  இருந்தது..ருக்மிணி ஒரு நாள் கிருஷ்ணர் குளிக்கச் சென்ற சமயம் புல்லாங்குழலை எடுத்து பூஜித்து,''நீ எப்போதும் கிருஷ்ணரின் அன்புக்குப் பாத்திரமாய் இருக்கும் ரகசியம் என்ன?''என்று கேட்டாள்.புல்லாங்குழல் சொன்னது,''என்னிடம் எந்த ரகசியமும் இல்லை.ஆனால் ஒன்றே ஒன்று மட்டும் எனக்குத்  தெரியும்.நான் வெற்றிடமாக இருக்கிறேன்.

வீடு

1

Posted on : Saturday, July 30, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு தமிழ் அறிஞர் உடல் நிலை பாதிக்கப்பட்டு பின்னர் குணமடைந்தார்.அவரிடம் டாக்டர் ,''நீங்கள் இனி வீட்டுக்குப் போகலாம்,''என்று சொன்னார்.உடனே தமிழ் அறிஞர் சிரித்துக்கொண்டே,'எந்த வீடு?''என்று கேட்டார்.டாக்டருக்கும் தமிழில் புலமை இருந்ததால்,''அந்த வீட்டுக்கு (மோட்சம் )போக இன்னும் நாளிருக்கிறது இப்போது உங்கள் வீட்டுக்குப் போங்கள்.''என்றார்.
**********
புலவர் ஒருவர் தன மாணவனை சோதிக்க எண்ணி சில்லறைக் காசுகள் கொஞ்சம் கொடுத்து,மேகம்,பசு, மணி மூன்றையும் வாங்கிவரப் பணித்தார். அந்த கெட்டிக்கார மாணவனும் புலவர் கேட்டதை வாங்கி வந்து கொடுக்க மகிழ்வுடன் அவனைத் தட்டிக் கொடுத்தார்.மாணவன் என்ன வாங்கி வந்தான்?காராமணிப் பயறு.என்ன புரியவில்லையா?
காராமணி=கார்+ஆ+மணி
கார்=மேகம்:  ஆ=பசு : 
**********

எதிரொலி

0

Posted on : Saturday, July 30, 2011 | By : ஜெயராஜன் | In :

பல் டாக்டர் நோயாளியின் வாயத் திறந்து சோதித்தார்,''அடேயப்பா,எவ்வளவு  பெரிய ஓட்டை!''என்று ஆச்சரியத்துடன் கத்தினார்.அவர் இதுவரை இவ்வளவு பெரிய துவாரத்தை எந்த நோயாளியின் பல்லிலும் பார்த்ததில்லை போலும். நோயாளி வருத்தத்துடன் சொன்னார்,''அதை ஏன் சார் இரண்டு முறை சொல்கிறீர்கள்?''டாக்டர் சொன்னார்,''நான் ஒரு முறைதான் சொன்னேன்.நீங்கள் இரண்டாவது கேட்டது எதிரொலியாய் இருக்கலாம்.''
**********
கதவு தட்டப்பட்டது உடனே வீட்டில் இருந்த வாலிபன் கதவைத் திறந்தான்.வாசலில் நின்று கொண்டிருந்தவரிடம் என்ன வேண்டும் என்று கேட்டான்.''நான் உங்கள் வயலினை சரி செய்ய வந்திருக்கிறேன்.''என்றான் வந்தவன்.வாலிபன் ஆச்சரியத்துடன்,''நான் ஒன்றும் வரச்சொல்லவில்லையே?''என்று கேட்டான்.வந்தவன் சொன்னான்,''உங்கள் அடுத்த வீட்டுக்காரர் தான் உங்கள் வயலினை சரி செய்யச்சொல்லி போன் செய்தார்.''
**********
ஒருவன் தன பெண்ணுடன் ஒரு காட்டுப் பகுதியில் காரில் வந்து கொண்டிருந்தான்.திடீரென ஒரு கொள்ளைக் கூட்டம் குறுக்கே வந்து காரை நிப்பாட்டியது.நான்கு பேர் துப்பாக்கியுடன் வந்தனர்.பெண் உடனே விலை உயர்ந்த நகைகளை தன வாயில் போட்டுக் கொண்டார்.கொள்ளையர் காரை சோதனையிட்டு விலை உயர்ந்த பொருள் எதுவும் கிடைக்காதலால் கோபமுடன் காரை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.தந்தை பெண்ணிடம் சொன்னார்,''நல்ல வேளை நகைகளை உன் வாயில் போட்டு கொள்ளை போகாமல் காப்பாற்றி விட்டாய்.என்ன,உன் அம்மா வந்திருந்தால் காரையும் காப்பாற்றியிருக்கலாம்.''
**********
''உனக்கு ஒரு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் வைத்திருக்கிறேன்,''என்றார் டாக்டர்.கைதியாய் வந்த அவன் முதலில் கெட்டசெய்தியை சொல்லச்சொன்னான்.டாக்டர் சொன்னார்,''கொலை நடந்த இடத்தல் இருந்த இரத்தமும் உன் இரத்தமும் ஒரே குரூப் என்று சோதனையில் தெரிகிறது.''நொந்து போன அவன் நல்ல செய்தி என்னவென்று கேட்க டாக்டர் சொன்னார்,''இரத்தத்தில் கொழுப்பு குறைந்துள்ளது.''
**********
ஆசிரியர் மாணவர்களிடம் கேட்டார்,''உங்கள் பெற்றோர் மீது அன்பு வைத்திருக்கிறீர்களா?''அனைத்து மாணவர்களும் ஆம் என்று பதில் சொல்ல ஆசிரியர் மீண்டும் கேட்டார்,''உங்கள் பெற்றோரை வெறுத்தால் ஆயிரம் ரூபாய் தருகிறேன் என்று சொன்னால் என்ன செய்வீர்கள்?''மாணவர்கள் அமைதி காத்தனர்.ஒரு மாணவன் மற்றும் கொஞ்சம் யோசனையுடன் மெதுவாய்க் கேட்டான்,''சார்,என் அண்ணனை வெறுத்தால் எவ்வளவு கொடுப்பீர்கள்?''
**********

காமம்

0

Posted on : Friday, July 29, 2011 | By : ஜெயராஜன் | In :

மனிதனுக்கு இப்போதிருக்கும் காமம் இயல்பானதாக,இயற்கையால் அளிக்கப்பட்டதாக இல்லை.இன்றைய மனிதனுக்கு காமம் பசியைப் போன்றதல்ல.நூற்றாண்டுகளாக மனிதனின் காமம் உடலிலிருந்து உள்ளத்துக்கு மாற்றப்பட்டு விட்டது.மனிதன் அளவுக்கு காமத்தையே எண்ணிக் கொண்டிருக்கும் பிற உயிரினம் எதுவும் இருக்க முடியாது.உள்ளத்துக்கு எல்லை இல்லை.ஆகவே மானுடனின் காமத்துக்கும் எல்லை இல்லை.அது அவனுக்குள் பெருகிச் சென்றபடியே இருக்கும்.உண்மையில் காமத்தைக் கட்டுப்படுத்துதல் என்ற செயலை விட ஒரு சாதாரண மனிதனுக்குள் இருக்கும் காமம் பல மடங்கு செயற்கையானது.
இயற்கையில் கட்டற்றது என்று எதுவும் இல்லை.ஒவ்வொன்றும் பிறிதொன்றால் சரியாகக் கட்டுப்படுத்தப் பட்டிபதே இயற்கையில் நாம் காணும் முரணியக்கத்தை உருவாக்குகிறது.ஒரே ஒரு புல் கூடக் கட்டுப்படுத்தாமல் விடப்பட்டால் பூமியையே மூடிவிடும்.ஒவ்வொரு உயிருக்குள்ளும் விரியவும் பரவவும் ஆக்கிரமிக்கவும் வெல்லவும் நீடிக்கவும் கூடிய ஆற்றல் உள்ளது.புலி இல்லாமல் மான் இருந்தால் காடு அழியும்,மானும் அழியும்.
மானுடக் காமம் மனத்துக்கு செல்லும்போது அதற்குக் கட்டுப்பாடே இல்லை.அது செல்லும் தூரம் கற்பனைக்கும் அப்பாற்பட்டது.அதைக் கட்டுப்படுத்துவது ஒரே மறுதரப்புதான்,உடல்.அது எல்லையற்ற ஆற்றலை உடையது  அல்ல.காமத்தில் காட்டுப்பாடில்லாமல் இறங்கியவர்கள் உடலைத்தான் முதலில் அழிக்கிறார்கள்.அதன்பின் உள்ளத்தை,ஏன்  என்றால் அத்து மீறும் காமம் வக்கிரமாகவே மாறும்.
                                  ஜெயமோகன் எழுதிய 'இன்றைய காந்தி'என்ற நூலிலிருந்து.

சமரசம்

0

Posted on : Friday, July 29, 2011 | By : ஜெயராஜன் | In :

காந்தி போராட்டத்தை சமரசத்தை நோக்கி செல்ல வேண்டிய ஒரு பயணமாகவே கண்டார்.'கடைசி வெற்றி' வரை செல்லக்கூடிய போராட்டம்  என்று ஒன்று இல்லை.எதிரிகளை அல்லது எதிர்த்தரப்பை முழுமையாக அழித்தொழித்துவிட்டு ஒரு வெற்றி என்பது அநேகமாக சாத்தியமில்லை.நம் எதிர்த்தரப்பிற்கும் அதற்கான இருப்பும் நியாயங்களும் உண்டு.அவர்களுக்கும் ஆசைகளும் திட்டங்களும் இருக்கும்.அவற்றுக்கும் இடம் கொடுக்கும் ஒரு முடிவே தீர்வாக இருக்க முடியும்.
ஆகவே போராட்டம் என்பது நமது தரப்பை முழுமையாகத் திரட்டிக் கொண்டு நம் ஆற்றலை முழுமையாக வெளிப்படுத்தி நம் கோரிக்கைகளை முன் வைக்கும் ஒரு செயல்பாடு மட்டுமே.நம் தரப்பைத் தவிர்க்க முடியாது என்று நம் எதிர்த்தரப்பு உணர்ந்ததுமே சமரசத்துக்கான இடம் ஆரம்பமாகிறது.நம் இடத்தை எதிர்த்தரப்பு அங்கீகரிப்பதைப்போலவே எதிர்த்தரப்பை நாமும் அங்கீகரிப்பதே சமரசம்.சமரசம் என்பது இருவரும் சிலவற்றை அடைந்து சிலவற்றை விட்டுக் கொடுத்து அடையும் ஒரு பொது முடிவு.
                                 ஜெயமோகன் எழுதிய இன்றைய காந்தி என்ற நூலிலிருந்து.

குடிகாரன்

0

Posted on : Thursday, July 28, 2011 | By : ஜெயராஜன் | In :

தாறுமாறாக ஒருவன் காரை ஓட்டிவருவதைக் கண்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் காரை நிறுத்தினார்.குடித்துவிட்டு காரை அவன் ஓட்டி வந்திருக்கிறான் என்று சந்தேகப்பட்ட அவர் அவை சோதிப்பதற்கான  கருவியின்முன் ஊதச் சொன்னார்.அவன் சொன்னான்,''அதுமட்டும் என்னால் முடியாது.எனக்குக் கடுமையான ஆஸ்த்மா.பலமாக ஊதினால் எனக்கு மூச்சுத் திணறல் வந்துவிடும்.''அதை ஏற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் அவனை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று சிறுநீர் சோதனைக்கு ஒரு பாட்டிலில் சிறுநீர் சேகரித்துத் தரச் சொன்னார்..உடனே அவன் பெருங்குரலில்,''இதுவும் என்னால் முடியாது. நான் நீரழிவு  நோய்க்காரன்.நான் திடீரென சிறுநீர் கழித்தால் என் இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடும்.அதனால் நான் இறக்கக் கூடும்,''அதையும் ஏற்றுக்கொண்ட அதிகாரி அவன் இரத்தத்தை சோதனை செய்ய முடிவெடுத்தார்.உடனே ஓட்டுனர்,''இதுவும் என்னால் முடியாது.எனக்கு ஒருவிதமான நோய் உள்ளது அதனால் என் உடலிலிருந்து இரத்தம் எடுத்தால் அதற்குப்பின் இரத்தம் நிற்காமல் வந்து கொண்டேயிருக்கும்.''சற்று மனம் தளராத அதிகாரி  சொன்னார்,''சரி,பரவாயில்லை.எனக்காக இதோ,இங்கு போடப்பட்டிருக்கும் வெள்ளைக் கோட்டில்  நடந்து வா.''இப்போது அவன் கத்தினான்,''இதுவும் என்னால் முடியாது.''ஏன் என்று இன்ஸ்பெக்டர் கேட்டார். அவன் சொன்னான்,''ஏனென்றால்,நான் குடித்திருக்கிறேன்.''இன்ஸ்பெக்டர் புன்முறுவலுடன் அவனை கைது செய்தார்.

கடவுளால் முடியாது

0

Posted on : Thursday, July 28, 2011 | By : ஜெயராஜன் | In :

புலவர்கள் எல்லாம் அக்பரை வானளாவப் புகழ்ந்து கொண்டிருந்தார்கள்.பல பரிசுகளைப் பெற்றுச் சென்றார்கள்.இறுதியாக பீர்பாலின் முறை வந்தது.பீர்பால் சொன்னார்,''அரசே,தாங்கள் செய்யக் கூடியதை அல்லாவாலும் செய்ய முடியாது,''புலவர்கள் பலரும்,''என்ன இருந்தாலும் பீர்பால்,கடவுளை விடப் பெரியவராக அரசரைக் கூறியது தவறு,''என்றனர்.அரசரும் அதை ஒத்துக்கொண்டு பீர்பாலை அதற்கு விளக்கம் அளிக்கக் கோரினார்.பீர்பால் சொன்னார்,''அரசே!தங்களுக்குக் கோபம் வந்தால் ஒருவரை நாட்டை விட்டு வெளியேற்றலாம்.ஆனால் கடவுளால் அது முடியாது அவர் எங்கே அனுப்புவார்?இந்த அண்டமே அவருக்குரியதுதானே?''பீர்பாலின் சாமர்த்தியமான பதில் அரசரை மகிழ்வித்தது.

காற்றாலை

0

Posted on : Tuesday, July 26, 2011 | By : ஜெயராஜன் | In :

எங்கெல்லாம் காற்றின் வேகம் மணிக்கு பதினெட்டு கிலோமீட்டருக்கு அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் காற்றாலைகளை அமைக்கலாம்.காற்றாலை கோபுரத்தின் உயரம் இருபது முதல் ஐம்பது மீட்டர்.வீட்டு உபயோகத்திற்கு சிறிய காற்றாலைகள் போதுமானவை.அவற்றிலிருந்து 0.25முதல் 0,5kilowatt வரை மின்சாரம் பெறலாம்.தொழிற்சாலை உபயோகத்திற்கு 50 முதல் 500kilowatt வரை மின்சாரம் பெறலாம்.காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிப்பதில் முன்னணியில் இருக்கும் நாடுகள்,அமெரிக்கா,டென்மார்க்,இந்தியா.இந்தியாவில் 20000 megawatt வரை காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.இந்தியாவில் காற்றாலை மூலம் மின் தயாரிப்பில் தமிழகம் முன்னணி வகிக்கிறது.

ஆத்திச்சூடி

0

Posted on : Tuesday, July 26, 2011 | By : ஜெயராஜன் | In :

''அறம் செய விரும்பு'',''ஆறுவது சினம்''என்று ஆத்திச்சூடிப் பாடல்களை ஆரம்பப் பள்ளியில் படித்திருக்கிறோம்.எளிதாகப் புரியும் தன்மையில் ஒரே வரியில் ஒரு பெரும் செய்தியை சொல்லும் ஆத்திச்சூடி ஔவையார்எழுதியது மொத்தம் 108 பாடல்களைக் கொண்டது.எளிமையாய் இருந்தாலும் சில பாடல்களை இள வயதில் புரியாமல் படித்துள்ளோம்.அவற்றில் சிலவற்றை அதன் பொருளுடன் காண்போம்.
*ஒப்புர ஒழுகு.: உலக நடப்பை அறிந்து அதன்படி நடப்பாயாக.
*ஔவியம் பேசேல்.:ஔவியம் என்பது பொறாமைச் சொல்லைக் குறிக்கும்.பிறரிடம் பொறாமைகொண்டு எதுவும் சொல்லாதே.
*கிழமைப்பட வாழ்.:கிழமைப்படுதல் என்றால் உரிமைபபடுதல் என்று பொருள்..உன்னுடைய பொருள் பிறருக்குப் பயன்படும்படி வாழ்வாயாக.
*கைவினை கரவேல்:உனக்குத் தெரிந்த கைத்தொழிலை பிறருக்குக் கற்பிக்காமல்  மறைக்காதே.
*கோதா ட்டொழி: கோது என்றால் குற்றமான: அதாவது குற்றமான விளையாட்டை ஒழி
*சித்திரம் பேசேல்: பொய்யை மெய் போலச் சித்தரித்துப் பேசாதே.
*சையெனத் திரியேல்.:பெரியோர்கள் உன்னைச் சீ என்று இகழும்படி திரியாதே.
*நிலையிற் பிரியேல்: உன்னுடைய உயர்ந்த நிலையிலிருந்து தாழ்ந்து விடாதே.
*நுண்மை நுகரேல்: நோய் தரும் உணவுகளை உண்ணாதே.
*:நொய்ய வுரையேல்: பயனில்லாத அற்ப வார்த்தைகளை நீ உரைக்காதே.
*பையலோடினங்கேல்.:  அறிவில்லாச் சிறுவரோடு நீ கூடாதே.
*வாதுமுற்கூறேல்.: பெரியோர்முன் நின்று வாதாடாதே.
*ஒன்னாரைத்தேறேல்:: நீ பகைவரை எப்போதும் நம்பாதே அல்லது சேராதே.

அளவாய் சிரிங்க

0

Posted on : Sunday, July 24, 2011 | By : ஜெயராஜன் | In :

''நீங்க என்ன ,51ரூபாய் கடன் வாங்கிட்டு 15ரூபாய் மட்டும் திரும்பித் தர்ரீங்களே?''
'நீங்கதானே  கொடுத்த  கடனைத்  திருப்பிக்  கொடுக்கச்  சொன்னீங்க!'
**********
''எங்கள் நாட்டில் தான் உயர்ந்த கட்டிடம் உள்ளது.அந்தக் கட்டிடத்தின் உச்சியில் ஒரு  கோழி முட்டையிட்டால் அது  கீழே விழுவதற்குள் சேவலாகிவிடும்.''
.பூ!இவ்வளவுதானா?எங்கள் நாட்டில் உள்ள உயர்ந்த கட்டிடத்தின் உச்சியில் இருந்து ஒரு குழந்தை கீழே விழுந்தால் தரைக்கு வரும்போது அவன் கிழவனாகி விடுவான்.'
**********
விருந்துக்கு வந்தவர் உணவருந்தும்போது  கேட்டார்,''என்னங்க உங்க நாய் என்னையே உற்றுப் பார்க்கிறது?''வீட்டுக்காரர் சொன்னார்,''வேறொன்றுமில்லை,நீங்கள் சாப்பிடும் தட்டு வழக்கமாக அது சாப்பிடும் தட்டு.அதுதான்.'
**********
அரசு வேளையில் வெற்றிகரமாகத் திகழ மூன்று யோசனைகள்;
*எந்த வேலையும் செய்யக்கூடாது.
*நன்றாக வேலை செய்வதுபோல நடிக்க வேண்டும்.
*அடுத்தவர் வேலைகளில் மூக்கை நுழைக்க வேண்டும்.
**********
டாக்டர்;தினமும் ஒரு வேலை கஞ்சி தான் குடிக்க வேண்டும்.
நோயாளி:எத்தனை நாளைக்கு டாக்டர்?
டாக்டர்:என்னிடம் செய்து கொள்ளும் வைத்தியத்திற்கு பணம் கொடுக்கும் வரை.
நோயாளி:கஞ்சி சாப்பிடுவதற்கும்,பில் தொகை  கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம்,டாக்டர்?
டாக்டர்:அப்போதுதானே என் பில் தொகை கொடுக்க உங்களிடம் பணமிருக்கும்?
**********
பத்திரிகை செய்தி:
''வெங்காய வேனும் பெருங்காய வேனும் மோதினதில் வெங்காய வேன் வெங்கையாவுக்கு பெருங்காயம்!''
''சாஸ்திரி வீட்டுக்குப் பக்கத்தில் குடியிருக்கும் மேஸ்திரி கீழே விழுந்து ஆஸ்பத்திரியில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டார்.''
**********
கணவன்:ஹலோ,பார்வதியா?
மனைவி:ஆமாங்க நான்தான் பேசுறேன்,என்ன விஷயம்?
கணவன்:நீ சினிமாவுக்குப் போறேன்னு சொன்னியே,போயிட்டேன்னு தெரிஞ்சா வீட்டுக்கு வரலாம்னு பார்த்தேன்.
**********
நோயாளி:டாக்டர்,எனக்கு ஐந்து நாளா சரியான ஜலதோஷம்.உங்களால் குணப்படுத்த் முடியுமா?
டாக்டர்:நான் சொல்றதை செய்யுங்க.நல்லா  சுடு நீரில் குளியுங்க.பின் அறையில் ஏ.சி யைப்போட்டு கொஞ்ச நேரம் இருங்கள்.
நோயாளி:அப்படி செய்தால் என் நோய் குணமாகி விடுமா,டாக்டர்?
டாக்டர்.உனக்கு இப்போது வந்திருக்கும் குளிருக்கு என்னிடம் மருந்து இல்லை.நான் சொன்னபடி செய்தால் உனக்கு நிம்மோனியா காய்ச்சல் வரும்.அதைக் குணப்படுத்த என்னிடம் மருந்து உள்ளது.
**********
வழுக்கைத் தலையர் :தண்ணீர் விட்டுக் கழுவ ஏராளமான முகமும் சீவுவதற்கு கொஞ்சம் முடியும் உடையவர்.
**********
ஒரு விளம்பரம்.
யானை விற்பனைக்கு!ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே!
(பி.கு:ஏற்றி இறக்குக் கூலி இரண்டு லட்சம்.)
**********



இன்னொரு முறை

0

Posted on : Sunday, July 24, 2011 | By : ஜெயராஜன் | In :

கிராமவாசி ஒருவன்,சிறிது கூட நாகரீகம் இல்லாது அவ்வூர் ஆலயத்தின் முன் சிறு நீர் கழித்துவிட்டான்.கோபம் கொண்ட கோவில் அதிகாரி அவனை ஊர்த்தலைவர் முன் கொண்டுபோய் நிறுத்தினார்.தலைவர் கேட்டார்,''கோவிலை அவமதித்தாயா?''அவன் சொன்னான்,''அய்யா,நான் வழக்கமாகக் கோவில் வழியாக அடிக்கடி சென்று வருவேன்.அன்று திடீரென அடக்க முடியாது சிறுநீர் வந்ததால் வேறு வழியில்லாது கொவில்முன் இருந்துவிட்டேன்.மற்றபடி கோவிலை அவமதிக்கும் எண்ணம் எனக்கு இல்லை.''தலைவர்,''என்ன இருந்தாலும் நீ செய்தது தவறான காரியம் உனக்கு ஐநூறு ரூபாய் அபராதம் விதிக்கிறேன்,''என்றார்.அவனும் மறுபேச்சு பேசாது பையிலிருந்து ஒரு ஆயிரம் ரூபாய் நோட்டை எடுத்து தலைவரிடம் கொடுத்தான்.தலைவர் அதை வாங்கித்தான் பையில் வைத்துக்கொண்டே சொன்னார்,''இப்போது என்னிடம் மீதி கொடுக்க ஐநூறு ரூபாய் இல்லை. அதனால் பரவாயில்லை.நாளைக்கு கோவில் முன்னால் இன்னொரு முறை சிறுநீர் கழித்துவிடு.''

காக முனிவர்

0

Posted on : Saturday, July 23, 2011 | By : ஜெயராஜன் | In :

காக முனிவர் சொல்கிறார்;
எவன் தன சுய நலனுக்காகப் பிறரைப் பொய்யாகப் புகழுகிறானோ ,அவன் பரிசுத்தமற்றவன்.
ஒருவனுக்கு உண்மையிலேயே புகழ் இருந்தாலும் அதைத்தானே தம்பட்டம் அடித்துக் கொள்வது அல்லது பிறர் அடிப்பதைக் கேட்பது இரண்டும் மகாபாவம்.
தகுதியற்றிருந்தும் பிறர் புகழ்வதைக் கேட்டு மகிழ்வதனால்  அகம்பாவம்  தான் பிடிக்கும்.

பேச்சு

0

Posted on : Saturday, July 23, 2011 | By : ஜெயராஜன் | In :

பேச வேண்டும் என்ற உந்துதலினால் பேசக்கூடாது.
எதையும் யோசியாமல் பேசக்கூடாது.
பேச்சு எப்போதும் நம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
தேவையானவைகளையும் பயனுள்ளவற்றையும் மட்டுமே பேச வேண்டும்.
வாக்குவாதம்,சர்ச்சை,சூடான சொற்போர் இவை தவிர்க்கப்பட வேண்டும்.
நாம் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.மற்றவர்கள் சொல்வது தவறு என்று வற்புறுத்தக் கூடாது.
குரலும்,பேசும் முறையும்,அமைதியாக வற்புறுத்தல் ஏதும் இன்றி இருக்க வேண்டும்.
மற்றவர்கள் சூடாக விவாதம் செய்தால் அதை சட்டை செய்யாது நாம் அமைதியைக் கடைப்பிடித்து பேச்சு சுமுகமாகப் போவதற்கு உதவியாக இருக்கக் கூடியவைகளை மட்டும் பேச வேண்டும்.
பிறரைப் பற்றிய வம்பளப்பு,கடுமையான விமரிசனங்கள்,இவற்றில் கலந்து கொள்ளக் கூடாது.ஏனெனில் இவற்றால் எந்தவித நற்பயனும் விளையாது.அவை நம் உணர்வை மேலிருந்து கீழே தாழ்த்தவே உதவுபவை.
ஆகவே எவரையும் புண்படுத்தும் அனைத்தையும் தவிர்க்க வேண்டும்.
                                                                  --ஸ்ரீ அரவிந்தர்.

நகம்

0

Posted on : Friday, July 22, 2011 | By : ஜெயராஜன் | In :

நகம் என்பது நமது தோலின் ஒரு பகுதி.ஆனால் தோலைவிடக் கடினமானது.கெரட்டின் எனும் புரதப்பொருள் தான் நகத்தின் கடினத் தன்மைக்குக் காரணம்.அகத்தின் நோய்கள் நகத்தில் தெரியும்.
நகம் வெளிறிப் போயிருந்தால்--இரத்தசோகை.
மஞ்சள் நிறத்தில் இருந்தால்-----மஞ்சள் காமாலை.
நீல நிறத்தில் இருந்தால்----------இரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைவு.
வெள்ளைப் புள்ளிகள் இருந்தால்-கால்சியம் சத்துக் குறைவு.
சுற்றிக் கரும்புள்ளிகள் தோன்றினால்--B12சத்துக் குறைவு.
நத்தைக்கூடு மாதிரி வீங்கினால்---காச நோய்,கல்லீரல்நோய்.
ஸ்பூன் மாதிரி மத்தியில் குழி விழுந்தால்--இரும்புச்சத்து குறைவு.

ஒப்புக்கொள்ளும் தைரியம்

1

Posted on : Friday, July 22, 2011 | By : ஜெயராஜன் | In :

எந்த ஒரு கட்டத்திலும் செய்த தவறை ஒத்துக்கொண்டால் அது மறக்கப்படவும் மன்னிக்கப் படவும் வாய்ப்பு இருக்கிறது.அடுத்த,'பிராயச்சித்தம்' அல்லது தீர்வு  காணும் கட்டத்திற்கு பிரச்சினை நகர்த்தப்பட்டு விடுகிறது.இல்லாவிடில் செக்கு மாடு மாதிரி பிரச்சினையானது சுற்றிச்சுற்றி வருகிறது.
தவறுகளை மறுப்பதும் மறைப்பதும் மற்றவர்களை எரிச்சல் அடையவே செய்யும்.இது குற்றத்தின் வீரியத்தை அதிகரிக்கும்.நிரூபிக்கும் முயற்சிகளும் அதிகமாகும்.அடுத்த தவறு நடந்தால் அது பூதாகரமாக்கப்படும்.
''நீ செய்தது தவறு,''என்ற குற்றச்சாட்டு நம் மீது விழுந்தால்,மனசாட்சிக்கு  மதிப்புக் கொடுத்து 'சரி,இனிமேல் நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன்,'என்று ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
தவறு செய்யும்போது இருக்கும் தைரியம்,ஒப்புக் கொள்ள வேண்டியபோது ஓடி  ஒளிந்து கொள்வது ஏன்?
                                                         --லேனா தமிழ்வாணன்.

விழிப்புடன் முன்னேறு

0

Posted on : Wednesday, July 20, 2011 | By : ஜெயராஜன் | In :

இன்றைய நாள் உனக்கு புதிய பிறப்பு:சிறந்தது:சாதனையைத் துவக்கு;கடந்த  காலத் தவறுகளை இருகரம் குவித்து வழி அனுப்பிவிடு.புதியவனாய்,தூய்மையாளனாய் சாதனையை இப்பொழுதே துவக்கு.கடந்தகாலத் தவறுகளினால் நல்ல பாடங்களைக் கற்றுவிட்டாய். ஆகையால் இப்போது புதிய தெம்புடன்,நம்பிக்கையுடன்,புதிய உறுதியுடன்,விழிப்புடன் முன்னேறு.
**********
வழி மாறாதே,அஞ்சாதே,தயங்காதே,கலங்காதே,சந்தேகம் கொள்ளாதே , வாழ்வை வீணாக்காதே.உன்னுள் அளவற்ற சக்தி குவிந்துள்ளது.நீ சக்தியின் பெரும் அணைத்தேக்கம்.வழியில் எதிர்ப்படும் ஒவ்வொரு தடங்கலும் வெற்றியின் படிகள்.அவை உன் எண்ணத்தின் ஆற்றலை வளர்க்கின்றன.குறை நிறைகளையும் பாவபுண்ணியங்களையும்  நினைவூட்டுகின்றன.
**********
                                                                        --சிவானந்தர்.

காணவில்லை

0

Posted on : Wednesday, July 20, 2011 | By : ஜெயராஜன் | In :

கணவனும் மனைவியும் திருவிழாவுக்குப் போயிருந்தார்கள்.கூட்ட நெரிசலில் மனைவி காணாமல் போய்விட்டாள்.கணவன் காவல் நிலையத்தில் புகார் செய்தான்.செய்தித்தாள்களில் விளம்பரம் செய்தான். ஆனால் மனைவி கிடைக்கவில்லை.அருகில் இருந்த ராமர் கோவிலுக்கு சென்று மனம் உருக வேண்டினான்,''காணாமல் போன என் மனைவி கிடைக்க அருள் புரியுங்கள்.''        ''இதே சாலை வழியாகப் போனால்,அனுமார் கோவில் வரும்.அங்கு போய்  வேண்டிக்கொள்.என் மனைவி காணாமல் போனபோது தேடிக் கண்டு பிடித்தது  அவர்தான்,''ராமர் தான் பேசினார்.
**********
மனைவி: எப்படி இவ்வளவு சீக்கிரம் இன்று வீட்டுக்கு வரமுடிந்தது?''
கணவன்:முதலாளிக்கு என் மேல் ஏகக் கோபம் .எந்த நரகத்துக்காவது தொலைந்து போஎன்று கத்தினார்.நான் நேராக வீட்டுக்கு வந்துவிட்டேன்.''
**********
பார்லிமெண்டில்  எதிர்க்கட்சித் தலைவர் ஏதோ கூறியபோது சர்ச்சில் அதை மறுப்பதுபோலத் தலையை அசைத்தார்.''எனது மதிப்புக்குரிய நண்பர் தலை அசைப்பதைக் காண்கிறேன்.ஆனால் என் சொந்தக் கருத்தைத்தான் சொல்கிறேன்.''என்றார் எதிர்க்கட்சித் தலைவர்.''நானும் என் சொந்தத் தலையைத்தான் அசைக்கிறேன்.''என்றார் சர்ச்சில்.
**********
                                                                 --குஷ்வந்த்சிங் ஜோக்ஸ்

பொறுமை

0

Posted on : Tuesday, July 19, 2011 | By : ஜெயராஜன் | In :

இரண்டு கழுதைகள் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தன.ஒரு கழுதை நன்றாகக் கொழுத்துஇருந்தது.மற்றது எலும்பும் தோலுமாக காணப்பட்டது.இளைத்த கழுதையைப் பார்த்து வலுத்த கழுதை கேட்டது,''எப்படி இருந்த நீ இப்படி ஆகிவிட்டாயே?''மெலிந்த  கழுதை சொன்னது,''என் முதலாளி கல் நெஞ்சன்.நாள் முழுவதும் வேலை  வாங்குவான்.ஆனால் ஒழுங்காகத் தீனி போட மாட்டான்.அடி உதை வேறு அவ்வப்போது கிடைக்கும்.''பலமான கழுதை,''பின் ஏன் அங்கேயே இருக்கிறாய்?ஓடி வந்து விட வேண்டியதுதானே?'' என்று கேட்டது.உடனே பதில் வந்தது,''என் முதலாளிக்கு ஒரு அழகான பெண் இருக்கிறாள்.அவளையும் அவன் கண்டபடி அடிப்பான்.''வலுத்த கழுதை கேட்டது,''அந்தப் பெண்ணுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்?''அதற்கு அந்த மெலிந்த கழுதை சொன்னது,''ஒவ்வொரு முறை என் முதலாளி தன பெண்ணை அடிக்கும்போது ,'உன்னை இந்தக் கழுதைக்குத்தான்  கட்டி வைக்கப்போகிறேன்'என்பான்.அதனால்தான் நானும் பொறுமையாய் காத்துக் கொண்டிருக்கிறேன் .''

வளர்ச்சி

0

Posted on : Tuesday, July 19, 2011 | By : ஜெயராஜன் | In :

உமர் கயாமின் படுக்கையிலே ஷயீரா படுத்திருந்தாள்.ஓவியங்கள் வரையப்  பெற்ற கிண்ணத்தில் மதுவை ஊற்றினான் உமர் கயாம்.நட்சத்திரங்கள் பதிக்கப்பட்ட நீல நிறத்து உடையில் இருந்தாள் ஷயீரா.அந்தக் காட்சி நீல வானத்து நட்சத்திரங்களிடையே நிலவு பவனி வருவதுபோல இருந்தது. கையில் கோப்பையுடன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் உமர். சிறிது நேரத்தில் கோப்பை காலியாயிற்று.மீண்டும்  ஊற்றிக் கொண்டான்.அரைகுறை போதையோடு ஷயீராவின் இதழ்களில் அழுத்தமாக முத்தமிட்டான் உமர். அவன் கண்களில் கசப்புணர்ச்சி தோன்றிற்று.மடமடவென மதுவைக் குடித்து  விட்டுச்சொன்னான்,''சீ!....என்ன முட்டாள்தனம்!மதுவைவிட பெண்களின் இதழ் சுவையானது என்று பாடிவிட்டேனே!''ஷயீரா சிரித்துக்கொண்டே சொன்னாள்,
''உங்கள் அபிப்பிராயத்தை இனி மாற்றிக் கொள்ளத்தான் வேண்டும்.ஏனென்றால் உங்களுக்கு வயதாகி விட்டது.''
                                                          --கண்ணதாசன்.

சந்தோசம்

0

Posted on : Wednesday, July 13, 2011 | By : ஜெயராஜன் | In :

சந்தோசத்தில் மூன்று வகை உண்டு.
களிப்பு: இது உடலைப் பொறுத்தது.நாம் விரும்பிச் சாப்பிடும்  உணவு.உடலால் அனுபவிக்கும் சுகங்களெல்லாம் களிப்பு.இவை திகட்டி விடும்.இரண்டாவது இட்லி சாப்பிடும்போது உள்ள சந்தோசம் பத்தாவது இட்லி சாப்பிடும்போது  இருக்காது.
மகிழ்வு: இது மனத்தால் ஏற்படுவது.நல்ல சங்கீதத்தை அனுபவிப்பது:நல்ல இலக்கியத்தைப் படிப்பது:நல்ல விசயங்களை ரசிப்பது:நல்ல பேச்சைக் கேட்பது. இவையெல்லாம் மகிழ்ச்சி.அவ்வப்போது ஏற்படும்.
ஆனந்தம்:இது மனதுக்குள் ஊற்றுப்போல் ஊறி வருவது.பிறருக்கு நன்மை செய்வது ,எல்லோருக்கும் சந்தோசமான காரியங்களைச் செய்வது எல்லாம் ஆனந்தம் தருபவை.

காலக்கோளாறு

0

Posted on : Wednesday, July 13, 2011 | By : ஜெயராஜன் | In :

கணவன் சாப்பிட உட்கார்ந்தான்.மனைவி பரிமாறினாள்.கணவன்,''சீ!இது என்ன சாப்பாடா?என் அம்மா சமைத்து சாப்பிட வேண்டும்.''என்றான்.
கணவனுக்கு மனைவி பழங்கள் கொடுத்தாள்.கணவன்,''சீ!இது என்ன பழமா?என் அம்மா கையால் பழங்களை  வாங்கி சாப்பிட வேண்டும்.''என்றான்.
மனைவி தன மடியில் கணவனின் தலையை வைத்து தூங்க வைத்தாள்.கணவன்,''சீ!நீ காட்டுவது பாசமா?பாசம் என்பதை என் அம்மாவிடம்தான் பார்க்க வேண்டும்!''என்றான்.
மனைவி,''என்னைக் கட்டிக்கொண்டு உங்கள் அம்மாவைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பதை விட உங்க அம்மாவையே கட்டிக் கொண்டிருக்கலாமே!'' 
என்றாள்.கணவன் சொன்னான்,''என்ன செய்வது?எனக்கு முன்னால் என் அப்பா கட்டிக் கொண்டு விட்டாரே!''
                                                                              --கண்ணதாசன்,

பொன்மொழிகள்-19

2

Posted on : Tuesday, July 12, 2011 | By : ஜெயராஜன் | In :

வயது செல்லச்செல்ல தோல் சுருங்கி விடுகிறது.-ஆனால்
மகிழ்ச்சியை விட்டுவிட்டால் வாழ்வே சுருங்கிவிடும்.
**********
சதா தள்ளாடுவதைவிட ஒருமுறை விழுந்து எழுவது சிலாக்கியம்.
**********
நாள் என்பது இரவையும் சேர்த்துத்தான்.
பூ என்பது காயையும் சேர்த்துத்தான்.
கடல் என்பது நுரைகளையும் சேர்த்துத்தான்.
வாழ்க்கை என்பது ரணங்களையும் சேர்த்துத்தான்.
**********
மீனுக்குக்கூடத் தொல்லை வராது-அதுதன்
வாயை மூடிக் கொண்டிருந்தால்.
**********
சின்னக் கவலைகள் என்பது கொசு போல:
ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தால் அது பறந்து ஓடிவிடும்.
**********
மனிதர்களில் இரண்டு வகையினர் மட்டுமே உண்டு.
ஒன்று திறமையானவர்கள்.
இரண்டு,திறமையைப் பயன்படுத்தாதவர்கள்.
**********
முகத்தை அழகாக வைத்துக்கொள்ள
செலவில்லாத ஒப்பனை புன்னகை.
**********
ஆசைப்படுவது மனம்.
ஆசைப்பட வைப்பது புத்தி.
அவதிப்படுவதோ உடல்.
**********
உன் கௌரவம் உன் நாக்கின் நுனியில் உள்ளது.
**********
இவ்வளவு நீண்ட வாழ்வில் ஒரே ஒரு முறைதான் சாகிறோம்.
**********
கோபத்தில் ஆரம்பமாவது எல்லாம்
இறுதியில் வெட்கப்படும்படி முடியும்.
**********
ஆபத்து பயத்தையும்,பயம் அதைவிடப் பெரிய ஆபத்தையும் தருகிறது.
**********
வயதானவர்கள் கவலைப்படுவதெல்லாம்,தங்களுக்கு வயதாகி விட்டதே என்பதல்ல:மற்றவர்கள் இளமையாக இருக்கிறார்களே என்றுதான்.
**********

பாரபட்சம்

0

Posted on : Tuesday, July 12, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருமுறை அசுரர்கள் பிரம்மாவிடம் சென்று அவர் தங்களிடம் பாரபட்சமாக நடப்பதாகக் கூறினார்கள்.அவர் அதை மறுத்து தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார்.விருந்தில் லட்டுகள் மட்டும் பரிமாறப்பட்டது.ஆனால் சாப்பிடப் போகுமுன் ஒவ்வொருவர் கைகளும் முழங்கையை மடக்க முடியாத அளவுக்குக் கட்டப்பட்டன.ஒவ்வொரு அசுரனும் தன எதிரே இருந்த லட்டை  எடுத்து முழங்கையை மடக்க முடியாத நிலையில் அதை வாயில் போட முடியாமல் தவித்தனர். அடுத்து வந்த தேவர்கள் ஒவ்வொருவரும் ஒரு லட்டை எடுத்து தன் வாயில் போட்டுக் கொள்ளாமல் எதிரே இருந்தவர்கள் வாயில் ஊட்டி  விட்டனர். இப்போது பிரம்மா அசுரர்களைப் பார்த்து சொன்னார்,''பாரபட்சமின்றி இருவருக்கும் நான் விருந்து வைத்தேன்.நீங்கள் சுயநலவாதியாக இருந்ததால்  உங்களுக்கு லட்டினை சாப்பிட முடியவில்லை.தேவர்கள் பிறருக்கு உணவு கொடுப்பதில் கவனமாக இருந்ததால் எல்லோருக்கும் லட்டு உண்ண முடிந்தது.வாழ்வில் பிறருக்காக உழைப்பவர்கள் கண்டிப்பாக முன்னுக்கு வருவார்கள்,''

கேலி செய்யும் உரிமை

0

Posted on : Sunday, July 10, 2011 | By : ஜெயராஜன் | In :

சில பேர் இங்கிதம் தெரியாமல் அறிமுகமாகும் அந்தக் கணத்திலேயே  பிறரைக்  கேலி செய்யத் தொடங்கி விடுகிறார்கள்.இதனால் நட்பு மலர வாய்ப்பில்லாமல் போய்விடுகிறது.மிகப் பலரை வைத்துக்கொண்டு  மிக வேண்டியவர்களே கேலி செய்தாலும் சம்பந்தப்பட்டவர்கள் ரொம்பவும் பாதிக்கப் பட்டு விடுகிறார்கள்.காரணம்,ஆட்கள் சேரச்சேர இவர்களெல்லாம் நம்மைப்பற்றி உயர்வாக எண்ண வேண்டும் என்ற எண்ணமே மனிதனுக்கு மேலோங்கி நிற்கிறது.
தாம் மதிக்கும் நபர் ஒரு சிலரே இருந்தாலும் அத்தகைய இடத்திலும் யாரும் கேலி செய்யப்படுவதை விரும்புவதில்லை.வெளியே தெரியக் கூடாத விசயமாக இருந்தால்,கேலி செய்பவர் தவிர ஒருவரும் இல்லாவிடினும் , கேலி செய்யப்படுபவர் அதை விரும்புவதில்லை.யாராக இருந்தாலும் எத்தகைய சூழ்நிலைகளாக இருந்தாலும் உடற்குறையை சுட்டிக்காட்டிக் கேலி  செய்வதை  எவரும் விரும்புவதில்லை.
ஒருவருக்கு மூட் அவுட் ஆன நிலையில்,மிகச்சாதாரண விஷயம் கூடக் கேலியாகப் பேசப்படக் கூடாது.ஒருவரின் மன நிலை அறியாது கேலி செய்தால் அதன் விளைவுகள் பின்னர் நினைத்து நினைத்து வருத்தப் படக் கூடியதாக அமையும்.
நம்மிடத்தில் மிகுந்த மரியாதை கொண்டிருப்பவர்களையும் நாம் கேலி செய்ய உரிமை இல்லை.ஒருவரைக் கேலி செய்கிறோம் என்றால் அவருக்கும் நமக்கும் நல்லுறவு இருக்க வேண்டும்.அவர் எதைக் கேலி செய்தாலும் தவறாகக் கருத மாட்டார் என்பதை நாம் மனப்பூர்வமாக நம்ப இடம் இருக்க வேண்டும்.
கேலியின் நோக்கம் மற்றவர்களை  சிரிக்க வைப்பதுதானே தவிர மற்றவர்களைப் புண்படுத்த அல்ல.இந்த உண்மையை உணராதவர்கள் நட்பையும் உறவையும் இழக்கிறார்கள்.மற்றவர்களிடமிருந்து மிகவும் விலகி விடுகிறார்கள்.அல்லது விலக்கப்படுகிறார்கள்.
                                                            --லேனா தமிழ்வாணன்.

ஞானத் தொழிற்சாலை

0

Posted on : Sunday, July 10, 2011 | By : ஜெயராஜன் | In :

ராஜா பர்த்ருஹரி ஒரு நாள் இரவு திடீரென்று விழித்துக் கொண்டு விட்டார்.  பக்கத்தில் மனைவியைக் காணவில்லை.அரண்மனை நந்தவனத்தில்  வந்து பார்த்தார்.அங்கே குதிரைக்காரனோடு அவள் கூடிக் கொண்டிருந்தாள்.மறுநாள்,ராஜா பர்த்ருஹரி சந்நியாசி ஆகி விட்டார்.மனைவியிடம் விடை பெறப்போனார்.மனைவி சொன்னாள்,''எனக்கு மிக்க மகிழ்ச்சி!ஒரு மகாராஜாவை மகா ஞானியாக்கியது நான்தானே!''  ராஜா  பர்த்ருஹரி சொன்னார்,''நீயல்ல,குதிரைக்காரன்,''ராணி அலட்சியமாகப்  பார்த்து விட்டு உள்ளே போவதற்காகத் திரும்பினாள்.பத்ருஹரி சொன்னார்,''நில்!அவனை எப்போது ஞானியாக்கப் போகிறாய்?''
                                                                      --கண்ணதாசன்.

வெற்றுப்படகு

0

Posted on : Saturday, July 09, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒருவன் படகின் மேல் ஆற்றைக் கடந்து கொண்டிருக்கும் சமயம் ஒரு வெற்றுப்படகு  அவனுடைய படகை மோதினால் அவன் எவ்வளவு கெட்டகுணம்  உள்ள மனிதனாக இருந்தாலும் அவன் கோபப்படமாட்டான்.  ஆனால் அவன் அந்தப் படகில் யாரேனும் ஒருவர் இருப்பதைப் பார்த்தால் படகை சரியாக செலுத்தும்படி கூச்சலிடுவான்.அவன் கூச்சலிடுவது கேட்கப்   படாமல் இருந்தால் அவனைத் திட்ட ஆரம்பித்து விடுவான்.இவை ஏன் நடக்கிறது என்றால் எதிரே வந்த படகில் யாரோ ஒருவன் இருக்கிறான்.ஆனால் அந்தப் படகு வெறுமையாய் இருந்தால் அவன் கூச்சலிடமாட்டான்.கோபம் அடைய மாட்டான்.
எப்பொழுதெல்லாம்,யாரேனும் உங்கள் மீது கோபப்பட்டால் அல்லது யாராவது  உங்கள் மீது மோதினால்,நீங்கள் இதற்குப் பொறுப்பு அவர்தான் என்று எண்ணுவீர்கள்.இப்படித்தான் அறியாமை முடிவு செய்கிறது.இப்படித்தான் அறியாமை மாற்றிக் கூறுகிறது.அறியாமை எப்போதும் சொல்லும்,''மற்றவர்  தான் இதற்குப் பொறுப்பு.காரணம்''ஆனால் விவேகம் சொல்கிறது,''மற்றவர்கள்தான் இதற்குப் பொறுப்பு,காரணம்  என்றால் நானும் இதற்குப் பொறுப்பாவேன், காரணமாவேன்.''மோதலைத் தவிர்ப்பதற்கு ஒரே வழி,'நான்'அங்கு இல்லாமல் இருப்பதுதான்.;நான்;பொறுப்பு என்று சொன்னால் ஏதோ நீங்கள் செய்து விட்டதாகப் பொருள் அல்ல.நீங்கள் ஏதும் செய்யாதிருக்கலாம்.ஆனால் அங்கே நீங்கள் இருப்பது ஒன்றே போதுமானது,அவர்கள் கோபமடைய.நீங்கள் நல்லது செய்கிறீர்களா,கெட்டது  செய்கிறீர்களா என்பது கேள்வி அல்ல.நீங்கள் அங்கு இருக்கிறீர்களா என்பதுதான் கேள்வி.''நீ உன்னுடைய படகை வெறுமையாக இருக்கச்செய்ய முடியுமானால் இந்த உலக ஆற்றைக் கடக்கும்போது ஒருவரும் உன்னை எதிர்க்க மாட்டார்கள்.உன்னை ஒருவரும் துன்புறுத்தமாட்டார்கள்.''

இனி வேண்டாம்

0

Posted on : Saturday, July 09, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு மனிதன் ஒவ்வொரு ஆண்டும் தன பிறந்த நாளன்று அந்த வருடம் பாடுபட்டுத் தேடிய பணம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு குதிரைப் பந்தயத்திற்கு செல்வான்.மீண்டும் மீண்டும் தோற்றபோதும் நம்பிக்கையுடன் ஒவ்வொரு ஆண்டும் இதைத் தொடர்ந்தான்.அவனுக்கு ஐம்பது வயது ஆயிற்று.அவன் நினைத்தான்,''ஒன்று பிச்சைக்காரனாக வேண்டும்,அல்லது பேரரசனாக வேண்டும்.நடுநிலை வேண்டாம்,''எனவே தன சொத்து முழுவதையும் விற்று குதிரைப் பந்தயம் சென்றான்.தோற்றான்.இப்போது அவனிடம் ஒன்றுமில்லை.ஒரு மலை உச்சிக்கு சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள சென்றான்.அப்போது ஒரு குரல்,''நிறுத்து!அடுத்த முறை உனக்கு நான் வெற்றி தருகிறேன்.''என்றது.நம்பிக்கையுடன் இறங்கி வந்து உழைத்துப் பணம் சேர்த்து குதிரைப் பந்தயம் சென்றான்.குரல் ஒரு குதிரை பெயரைச்  சொல்ல அதன் பேரில் பணம் கட்டினான்.அக்குதிரையும் வெற்றி பெற்று அவன் பெரும் பணம் பெற்றான்.அடுத்த பந்தயம் துவங்க இருக்கும்போது மீண்டும் அக்குரல் ஒரு குதிரையின் பெயரைச்  சொல்ல அவன் அதன் மீது பணம் கட்ட, மீண்டும் வெற்றி.மூன்றாவது பந்தயத்திற்குப் பணம் கட்டக் கிளம்பினான்.குரல் சொன்னது,''இனி வேண்டாம்,''ஆனால் அவன் சொன்னான்,''அமைதியாயிரு.நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்.என் நட்சத்திரங்கள்  உச்சத்தில் இருக்கின்றன.யாராலும் என்னைத் தோற்கடிக்க முடியாது.''இப்போது அவனாகத் தேர்ந்தெடுத்த குதிரை கடைசியாக வந்தது.அனைத்தையும் இழந்து பிச்சைக்காரன் ஆனான்.அவன் தனக்குள்ளே முணுமுணுத்தான்,''இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?''குரல் சொன்னது,''இப்போது நீ மலை உச்சிக்கு சென்று குதித்து விடலாம்.''

கேள்விக்கு பதில்

0

Posted on : Friday, July 08, 2011 | By : ஜெயராஜன் | In :

துறவி ஒருவரை ஒருவன் பார்க்க சென்றான்.அவரிடம் தன நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்க அனுமதி கேட்டான்.அவரும் சம்மதிக்கவே அவன் கேட்டான்,''எப்போதும்நீங்கள்சிரித்தமுகத்துடனஇருக்கிறீர்கள்.கோபம்  கொள்வதே இல்லை.நீங்கள் பொறாமைப்பட்டு யாரும் பார்த்ததில்லை.என் சந்தேகம் என்னவென்றால்,நீங்கள் நடிக்கிறீர்களா?உண்மையில் இப்படி இருக்க முடியுமா?''துறவி சொன்னார்,''அது இருக்கட்டும்.இப்போது உன் கைரேகையைப் பார்த்தேன்.இன்னும் ஏழு நாட்கள்தான் நீ உயிருடன் இருப்பாய்.ஏழாவது நாள் சூரியன் மறையும்போது நீ மரணமடைவாய்,''அவன் பதட்டத்துடன் உடனே அங்கிருந்து கிளம்பி விட்டான்.வீட்டில் போய் உடனே படுத்துக் கொண்டான்.குடும்பத்தார் என்னவென்று விசாரிக்க நடந்ததை சொன்னான்.எல்லோரும் அழ ஆரம்பித்தனர்.சாவு நெருங்கிக் கொண்டிருந்தது.எதுவும் இனி செய்ய முடியாது என்ற தெளிவான முடிவுக்கு அவன் வந்ததும்,அவனுக்குள் ஒரு விசித்திரம் நிகழ்ந்தது.
அவன் யோசித்தான்,''துறவி தினமும் தியானம் செய்ய சொல்வாரே.நாம்கூட,இப்போது என்ன அவசரம்,வயதான காலத்தில் பார்த்துக் கொள்ளலாமே என்று நினைத்தோம்.பல ஆண்டுகள் தள்ளிப் போட்டதை ஏன் இப்போது ஆரம்பிக்கக்கூடாது ?''இரண்டு தினங்களில் முழுமையான மௌனத்தில் ஆழ்ந்து விட்டான்.நான்காவது நாள்,அவன் முகம் அழகாக ,கருணை ததும்ப ஒரு ஞானி போலக் காட்சி அளித்தது.ஏழாவது நாள் வந்தது.சூரியன் மறையும் நேரமும் வந்தது குடும்பத்தினர் யாரையும் கவலைப்படக்கூடாது என்று கூறிவிட்டான்.அந்தத் தருணத்தில் துறவி அங்கு வந்தார்.அவனைக் காப்பாற்ற முடியுமா எனக் குடும்பத்தினர் துறவியிடம் கேட்டனர்.துறவி அவனிடம் சொன்னார்,''நீ சாக மாட்டாய்.இன்னும் உனக்கு நீண்ட ஆயுள் உள்ளது.நீ கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க எனக்குத் தெரிந்த வழிஇதுதான்.நான் உன்னிடம் என்னதான் சொல்லியிருந்தாலும் உன் சந்தேகம் தீர்ந்திருக்காது.எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க முடியும் என்ற அனுபவத்தை உனக்குக் கொடுக்க விரும்பினேன்.இந்த ஏழு நாட்களும் உனக்கு அந்த அனுபவத்தைத்  தந்து விட்டது.உனக்கு வேண்டிய பதில் கிடைத்து விட்டது அல்லவா?''அவன் உடனே படுக்கையிலிருந்து கீழே குதித்துதுறவியின் பாதத்தைத் தொட்டு வணங்கினான்.

வக்கீல் வாதம்

0

Posted on : Friday, July 08, 2011 | By : ஜெயராஜன் | In :


ஒரு விவசாயியின் தோட்டத்தில் ஒருவன் அனுமதியில்லாமல் நுழைந்து அவன் வளர்த்து வந்த காடைகளை சுட்டான் என்று வழக்கு போடப்பட்டது.எதிர் தரப்பு வக்கீல் விவசாயியைக்  கேள்வி மேல் கேள்வி கேட்டு அவனைக் குழப்ப முயன்றார்.
வக்கீல்:இவர்தான் உன் காடைகளை சுட்டார் என்று சத்தியம் செய்ய முடியுமா?
விவசாயி:நான் அவர்தான் சுட்டார் என்று கூறவில்லை.அவர் சுட்டிருக்கக் கூடும்  என்று சந்தேகப்படுகிறேன்.
வக்கீல்:சரி,ஏன் அப்படி அவர்மேல் சந்தேகப்பட்டாய்?
விவசாயி:நான் அவரை,கையில் துப்பாக்கியோடு இருப்பதைப் பார்த்தேன்.அடுத்து என் நிலத்தில் துப்பாக்கிசப்தம் கேட்டேன்.காடைகள் இறந்து விழுவதைப் பார்த்தேன்.என்னுடைய இறந்த காடைகள் அவர் கையில் இருப்பதைப் பார்த்தேன்.அவ்வளவுதான்.ஆனால் வக்கீல் அவர்களே!என் காடைகள்,தானே தற்கொலை செய்து கொண்டன என்று நீங்கள் கூற மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

தெரிந்து கொள்வோம்.

2

Posted on : Thursday, July 07, 2011 | By : ஜெயராஜன் | In :

இலட்சியத்தை அடையும் வரை நில்லாமல் போய்க் கொண்டிருக்க வேண்டும் என்பதை நதியிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
எல்லா மனிதர்களோடும் எல்லாப் பொருட்களுடனும் அவரவர் அல்லது அதனதன் தன்மைக்கேற்பக் கலந்து பழக காற்றிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
அனைவரையும் சமமாகப் பார்க்க சூரியனிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
வாழ்வது மாயம்,மண்ணாவது திண்ணம்,என்பதை கானல் நீரிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
தன்னை வெட்டுபவனுக்கு நிழல் கொடுத்து தன்னை வெட்ட உதவும் கோடாரிக்குக் காம்பாகவும் உதவும் மரத்திடமிருந்து பெருந்தன்மையைக் கற்றுக் கொள்வோம்.

பொதுத்தொண்டு

0

Posted on : Thursday, July 07, 2011 | By : ஜெயராஜன் | In :

புத்தரிடம் சீடராயிருந்த சிலர் பொதுத் தொண்டு செய்வதற்காகப் புறப்பட்டனர். அப்போது புத்தர் அவர்கள் அதற்கு ஏற்றவர்கள் தானா  என்பதை சோதிக்க விரும்பினார்.அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார்.
புத்தர்: நீங்கள் மக்களிடம் செல்லும்போது அவர்கள் உங்களை வரவேற்கவில்லை என்றால் என்ன செய்வீர்கள்?
சீடர்கள்:வரவேற்கவில்லைஎன்றாலும் எங்களை வெறுக்கவில்லையே என்று எண்ணி எங்கள் பணியினைத் தொடருவோம்.
புத்தர்:வெறுத்தால்....?
சீடர்கள்.வெறுத்தாலும் அடிக்கவில்லையே என்று மகிழ்வோம்.
புத்தர்:அவர்கள் உங்களை அடித்தால்....?
சீடர்கள்:அடித்தாலும் கொல்ல நினைக்கவில்லை அல்லவா என்று நினைப்போம்.
புத்தர்:கொன்றால்....?
சீடர்கள்: கொன்றால் விடுதலைதானே?அதனால் மகிழ்ச்சிதானே!
புத்தர்:நீங்கள் பொதுத் தொண்டுக்குப் போகலாம்.
இதுதான் பொதுத் தொண்டுக்கு இலக்கணம்.

வசப்படும்.

0

Posted on : Wednesday, July 06, 2011 | By : ஜெயராஜன் | In :

தாய் மாடு புல் மேயப் போயிருந்தது.அதன் குட்டி கயிற்றை அவிழ்த்துக் கொண்டு தாயைப் பார்க்க ஓடிற்று.மாட்டின் உரிமையாளர் வேகமாக ஓடிச்சென்று குட்டியைப் பிடிக்க முயன்றார்.ஆனால் குட்டி திமிறிக்கொண்டு ஓடியது நீண்ட நேர முயற்சிக்குப்பின்னும் அவரால் குட்டியைப் பிடிக்க முடியவில்லை.அப்போது அங்கு ஆடு மேய்த்துக் கொண்டிருந்த ஒரு பத்து வயது சிறுமி,''அய்யா,நீங்கள் கொஞ்சம் பொறுங்கள்.நான் குட்டியைப் பிடித்துத் தருகிறேன்,''என்றாள்.அவருக்கோ,தன்னாலேயே பிடிக்க முடியாத கன்றை இந்த சிறுமி எப்படிப் பிடிக்கிறாள் என்று பார்த்தார்.அந்த சிறுமி நேரே கன்றின் அருகில் சென்றாள்.மெதுவாக தன விரல் இரண்டினை கன்றின் வாயில் மெதுவாக திணித்தாள்.தாய்ப்பால் குடிக்க ஏங்கிக் கொண்டிருந்த அந்தக் கன்று அச்சிறுமியின் விரல்களை தன தாயின் மடிக் காம்பு என்று எண்ணி அதை சுவைத்துக் கொண்டே அவள் பின்னே அமைதியாக வந்தது.மாட்டின் சொந்தக்காரர் அக்கன்றின் நிலையறிந்து அதைப் பிடித்த அச்சிறுமியிடமிருந்து ஒரு பாடம் கற்றார்.

அரிச்சந்திரன்

0

Posted on : Wednesday, July 06, 2011 | By : ஜெயராஜன் | In :

அரிச்சந்திரன் சுடலை காத்துக் கொண்டிருந்தபோது அந்த சுடலைக்கு ஏராளமான பிணங்கள் கொண்டு வரப்படுவதைக் கண்டான்.எந்தப் பிணத்தைப் பற்றியும் அவன் விசாரிப்பதில்லை.பணத்தை மட்டும் வசூலித்தான்.ஒரு பிணத்தைப் பார்த்ததும் அதைப்பற்றி விசாரிக்க வேண்டும் போல் தோன்றியது.பிணம் தூக்கி வந்தவர்களிடம் கேட்டான்,''ஐயா,இது யாருடைய  பிணம்?''அவர்கள் சொன்னார்கள்,''இந்த ஊரிலுள்ளு பணக்காரர்களில் இவரும் ஒருவர்.வட்டிக்குப் பணம் கொடுப்பதே இவர் தொழில்.''அரிச்சந்திரன் அமைதியாகத் தலை அசைத்தான்.பிணத்திற்கு நெருப்பூட்டிவிட்டு
அவர்கள் சென்றார்கள்.சிறிது நேரத்தில் நெருப்பின் வேகத்தால் நரம்புகள் இழுக்கப்பட்டு பிணம் எழுந்து உட்கார்ந்தது.  அரிச்சந்திரன் கத்தினான்,''வட்டி வசூலாகி விட்டது.''பிணம் மீண்டும் படுத்துக்  கொண்டது.
**********
''கல்யாணி ராகம் என்றாலே எனக்குப் பிடிக்காது,''என்றார் பாகவதர்.
'ஏன்?'என்று கேட்டான் சிஷ்யன்.
''என் மனைவி பெயர் கல்யாணி.''என்றார் அவர்.
**********
                                                                      --கண்ணதாசன் எழுதிய தோட்டத்துப் பூக்கள் என்ற நூலிலிருந்து.

சிறந்த பெண்

0

Posted on : Tuesday, July 05, 2011 | By : ஜெயராஜன் | In :

கப்பல் கவிழ்ந்து ஒரு தீவில் ஒதுங்கிக் கரை சேர்ந்த ஒருவன் ,அங்கிருந்து எப்படி வெளியேறுவது என்ற கவலையுடன் திரிந்தான்.சில மாதங்கள் ஆயின.அப்போது அங்கு கிடந்த ஒரு பழைய விளக்கை எடுத்துத் தேய்த்துக் கொண்டிருந்தான்..உடனே ஒரு பூதம் வந்து,''நான் உனக்கு அடிமை.உனக்கு தேவைப்பட்ட இரண்டு வரங்களைக் கேள்.உடனே நான் செய்கிறேன்,''என்றது.உடனே அதை சோதித்துப் பார்க்க எண்ணி,''உலகிலேயே சிறந்த மதுவையும்,மாதுவையும் கொண்டு வா,''என்றான்.அடுத்த நிமிடமே,ஒரு சிறந்த மது பாட்டிலையும்,அன்னை தெரசாவையும் கொண்டு வந்து நிறுத்தியது அந்த பூதம்.

உழைப்பு

0

Posted on : Tuesday, July 05, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு துறவி தன பயணத்தில் ஒரு ஊருக்கு வந்தார்.அப்போது நன்பகல்.கடுமையாய் வெயில் அடித்துக் கொண்டிருந்தது அந்த ஊரில் கடுமையான வறட்சி.துறவிக்கோ கடுமையான தண்ணீர் தாகம்.அலைந்து பார்த்தும் எங்கும் நீர் கிடைக்கவில்லை.அப்போது ஒரு இளைஞன் தன வயலில் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டு அங்கு விரைந்து அவனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார்.அவனும் தண்ணீர் கொடுக்க அவருக்கு தாகம் தீர்ந்தது.அவர் இளைஞனிடம் சொன்னார்,''தம்பி,நீ கொடுத்து வைத்தவன்.ஊரே வறட்சியின்  பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது உன் நிலம் மட்டும் பசுமையாக இருக்கிறது.உன் கிணற்றில் மட்டும்தான் நீர் இருக்கிறது.கடவுளின் பூரண அருள் உனக்கு இருக்கிறது.''இளைஞன் துடிப்புடன் சொன்னான்,''அய்யா.வந்த வழியில் பார்த்திருப்பீர்கள்.இந்த ஊரில் நிலம் எல்லாம் பாறையாக இருக்கிறது.இந்த இடமும் அப்படித்தான் இருந்தது.ராப்பகலாய் கடுமையாய் உழைத்து இந்த நிலத்தை சீர் திருத்தி அதன் பலன் இப்போதுதான் கிடைத்திருக்கிறது.அப்படி நான் உழைத்ததன் பலனை,சாதாரணமாக வெறும் கடவுளின் அருள் என்று சொல்லி விட்டீர்களே!''துறவி சொன்னார்,''தம்பி,உன் உழைப்பு என்பதெல்லாம் உண்மைதான்.இருந்தாலும் கடவுள் அருள் இல்லாமல் உன் கிணற்றில் தண்ணீர் ஊறி உன் வயலில் விளைச்சல் வந்திருக்குமா?''என்று கேட்டார். அதற்கு இளைஞன் சொன்னான்,''அய்யா,நான் இங்கு வருவதற்கு முன்னும் இந்த நிலமும் இருந்தது.கடவுளும் இருந்தார்.நான் இங்கு வராமல் கடவுள்  மட்டும் இருந்தபோது இந்த நிலத்தைப் பார்க்க சகிக்கவில்லையே!''

சிரிப்புக்கா பஞ்சம்?

1

Posted on : Monday, July 04, 2011 | By : ஜெயராஜன் | In :

''ஏன் தம்பி,உன் மனைவிக்கு  அவளுடைய அத்தை அதிகச் சொத்தினை எழுதி வைத்திருப்பதால் தான் நீ அவளை கல்யாணம் செய்து கொண்டாயாமே?''
'இது அபாண்டமான குற்றச்சாட்டு.என் மனைவியுடைய அத்தை என்றில்லை,யார் அவள் பேரில் சொத்து எழுதி வைத்திருந்தாலும் அவளைக் கல்யாணம் செய்திருப்பேன்.'
**********
''ஒரு புதிருக்கு பதில் சொல்லு பார்ப்போம்!நான்கு கால் இருக்கும்.அதன் மீது ஈக்கள் குடியிருக்கும்.அது என்ன?''
'நாயா?'
''இல்லை.உங்கள் வீட்டு டைனிங் டேபிள்.''
**********
ஒரு கிராமத்து ஆள் நகரத்துக்கு வந்தார்.ஒரு வீட்டில்,'கதவைத் தட்டாதீர்கள்.அழைப்பு மணியை அடிக்கவும்'என்று எழுதிய பலகை இருந்தது.அதைப் பார்த்த அவர் அழைப்பு மணியை அடித்தார்.வீட்டினுள்ளிருந்து ஒருவர் வந்து கதவைத் திறந்து,''உங்களுக்கு என்ன வேண்டும்?''என்று கேட்டார்.கிராமத்து ஆளும்,'எனக்கு ஒன்றும் வேண்டாம்.இதில் அழைப்புமணியை அடிக்கச் சொல்லி இருந்ததால் அடித்தேன்.'என்றார் வீட்டுக்காரருக்கோ கோபம் வந்து விட்டது.அவர் ''எனக்குத் தெரியும்.இந்தக் குரங்குகளெல்லாம் மரத்துக்கு மரம் தாவித் திரியுமே அந்த கிராமத்தான்தானே நீ ?''என்றார்.கிராமத்து ஆளோ கொஞ்சம் கூடப் பதட்டமில்லாது சொன்னார்,'அது பரவாயில்லை,இங்கே நகரத்திலே ஒரு அழைப்பு மணி அடித்தாலே ஒரு குரங்கு வந்து நிற்கிறதே!'
**********
''உங்கள் பாடலுக்கு ஏன் தொடர்ந்து இடைவிடாது கைதட்டிக் கொண்டிருக்கிறார்கள்?''
'கைதட்டிக் கொண்டே இருந்தால் நான் அப்புறம் பாட மாட்டேன் என்று சொன்னேன்.'
**********
''என்ன இது நீங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரருக்கு வணக்கம் சொல்கிறீர்கள்.அவர் திரும்ப வணக்கம் சொல்லாமல் போகிறாரே!''
'அதை ஏன் கேட்கிறீர்கள்?நான் எதைக் கொடுத்தாலும் அவர் திரும்பக் கொடுப்பதில்லை.'
**********
''இந்த நாயோடு பெரிய தொந்தரவாய் இருக்கு.உடனே அதைக் கொண்டுபோய் பக்கத்திலுள்ள காட்டில் விட்டு வாருங்கள்.''என்றாள் மனைவி.உடனே கணவனும் நாயைத் தூக்கிக் கொண்டு காட்டுக்குப் போனான்.நீண்ட நேரம் கழித்து வந்த கணவனை மனைவி தாமதத்திற்குக் காரணம் கேட்க,கணவன் சொன்னான்,''காட்டில் நாயை விட்டுவிட்டு வரும்போது எனக்கு வழி தெரியவில்லை.அப்புறம் நம் நாய்தான் எனக்கு வழி காட்டிற்று,''அவன் பின்னால் நாய் நின்று கொண்டிருந்தது.
**********
''இன்று பார்பர் ஷாப்பில் உனக்கு பார்பர் முடி வெட்டிக் கொண்டிருக்கும்போது மூன்று இடத்தில் காயம் ஏற்பட்டு  இரத்தம் வழிந்தது.அந்த இடத்திலெல்லாம் மட்டமான பிளாஸ்திரியை அந்த ஆள் ஓட்டினான்.இருந்தும் அவனுக்கு கட்டணம் போக இருபது ரூபாய் டிப்ஸ் வேறு கொடுத்தாயே,அது ஏன்?''
'ஒரே ஆள் பார்பர் வேலையையும்.கசாப்புக்கடைக்காரன் வேலையையும்,மருத்துவர் வேலையையும் பார்த்தானே.அதற்காகவாவது  இந்த டிப்ஸ் கொடுக்கத்தானே வேண்டும்?''
**********
மனைவி: இந்தாங்க முடி உதிராமல் இருக்க ஒரு  தைலம்.
கணவன்:எனக்கு ஒன்றும் முடி உதிரவில்லையே!
மனைவி:அப்போ இதை உங்கள் டைப்பிஸ்ட் அம்மையாருக்குக்
கொடுங்கள்.துணி துவைக்கும்போது பார்த்தால் உங்கள் சட்டையெல்லாம் ஒரே முடி.'
**********

உயரம்

0

Posted on : Monday, July 04, 2011 | By : ஜெயராஜன் | In :

அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர் ராக்பெல்லர்.அவர் தனது வயதான  காலத்திலும் கூட ஓய்வின்றி கடுமையாக உழைத்து வந்தார்.வியாபார நிமித்தம் பல நாடுகளுக்கும் பறந்து கொண்டே இருந்தார்.ஒரு நாள் விமானப் பயணத்தின்போது அருகில் அமர்ந்திருந்த ஒரு வாலிபன் கேட்டான்,''அய்யா, நீங்களோ உலகிலேயே பெரிய பணக்காரர்.உங்களுக்கும் வயதாகிவிட்டது.இன்னும் எதற்காக நீங்கள் உழைக்க வேண்டும்?''அப்போது  ராக்பெல்லர்,''இப்போது நாம் செல்லும் விமானம் அதிக பட்ச உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறது அல்லவா?இதற்கு மேல் உயரப் போக முடியாது.இதில் திருப்தி அடைந்து விமானம் ஓடுவதை நிறுத்தினால் என்ன ஆகும்?''என்று கேட்டார்.விபத்து உண்டாகும் என வாலிபன் பதில் சொன்னான்.உடனே ராக்பெல்லர்,''நம் வாழ்க்கையும் அத்தகையதே.மேலே வந்து விட்டோம் என்று ஓய்வு எடுக்கப்போய் விட்டால் தொழில் நசிந்துவிடும்.உழைப்பது என்பது வருமானத்துக்கு மட்டுமல்ல.அது என் மன திருப்திக்கு,உடல் ஆரோக்யத்திற்கு.''என்றார்.வாலிபன் இப்போது அவருடைய வெற்றியின் ரகசியத்தை அறிந்து கொண்டான்.

வீண்செலவு

1

Posted on : Sunday, July 03, 2011 | By : ஜெயராஜன் | In :

வேட்டையாடச் சென்ற ஒரு அரசன் காலில் முள் குத்தியது.வலி தாங்க முடியவில்லை.உடனே காட்டிலுள்ள மாடுகளை எல்லாம் வெட்டி அவற்றின் தோலை காடு முழுவதும்  பரப்பச் சொன்னான்.அருகில் இருந்த துறவி ஒருவர்,''உன் காலில் முள் குத்தியது என்றால்,உனது பாதங்களை மட்டும் காக்க ஒரு மாட்டின் இரு தோல்துண்டுகள் போதுமே?எதற்கு எல்லா மாடுகளையும் கொன்று வீண் செலவு?''என்று கேட்டார்.
அதுபோல உலகை இன்ப மயமாக மாற்ற லட்சியம் கொண்டவர்கள் எங்கிருந்து ஆரம்பிப்பது என்று மன்னன் கேட்க துறவி சொன்னார்,''ஒருவன் தன உள்ளத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமே அல்லாது உலகத்தை அல்ல.''

தவறும் தண்டனையும்

0

Posted on : Sunday, July 03, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு வேலைக்காரன் முதலாளியைக் கோபத்தில் 'நாயே'என்று திட்டிவிட்டான்.விஷயம் பஞ்சாயத்திற்குப் போனது.வேலைக்காரன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டான்.பஞ்சாயத்தார்,அவனை,பிள்ளையார் சிலைக்கு முன் நின்று நூறு தோப்புக்கரணம் போடச் சொன்னார்கள்.அவனும்,'என் முதலாளியை  நாயே,என்று நான் சொன்னது தப்பு,'என்று சொல்லிக் கொண்டே நூறு தோப்புக்கரணம் போட்டான்.
ஒரு தடவை நாயே என்று சொன்னது தவறு.
நூறு தடவை நாயே என்று சொன்னது தண்டனை!

யார் கவனிப்பார்?

1

Posted on : Saturday, July 02, 2011 | By : ஜெயராஜன் | In :

ஒரு கிழவனுக்கு என்பது வயது.நீண்ட நாட்களாக உடல் நலமின்றி படுக்கையிலேயே இருந்தார்.அவருடைய மகன்அவரை  நன்றாகக் கவனித்தார்.. ஆனால் எதிர்பாராத விதமாக மகன் இறந்துவிட்டார்.அதன்பின் அவருடைய பேரன் அவரை  நன்றாகக் கவனித்துக் கொண்டான்..பேரனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது இப்போது அவர் கொள்ளுத் தாத்தா ஆகிவிட்டார்.ஆனாலும் அவர் மிக வருத்தத்துடன் இருந்தார்.உறவினர் ஒருவர் காரணம் கேட்க கிழவன் சொன்னார்,''என் பேரன் என்னை நான்றாகப் பார்த்துக் கொண்டான்.அவன் இறந்துவிட்டால் அவன் மகன் என்னை கவனிப்பானோ,மாட்டானோ என்றுதான் கவலையாக இருக்கிறது.''

அஹிம்சை

0

Posted on : Saturday, July 02, 2011 | By : ஜெயராஜன் | In :

வாழ்வில் என்ன வேண்டுமோ அதை அடைய மிரட்டல் அல்லது பலாத்காரத்தைக் காட்டிலும் அஹிம்சை முறை விரைவாகவும் எளிதாகவும் வெற்றியைத் தேடித்தரும்.யாரேனும் மிரட்டலிலோ வன்முறையிலோ ஈடுபட்டால் அவர்கள் கிலி அடைந்திருக்கிறார்கள்,அல்லது தங்களைத்  தாங்களே மட்டமாக எடை போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று ஊகிக்கலாம்.வன்முறை பற்றிய எண்ணமே அவர்களது பலவீனமான மனநிலையைக் காட்டிக் கொடுப்பதாக அமையும்.மிரட்டல் அல்லது வன்முறையில் ஈடுபடுவதன் மூலம் தனது அடிமனதிலுள்ள தாழ்வு உணர்வுகளை ஒருவன் வெளிப்படுத்துகிறான்.மற்றவர்கள் உள்ளபடி மிரண்டு போனால் உடனே அல்லது சிறிது காலம் கழித்து விரட்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பார்கள்.மிரட்டலுக்கு பயப்படாதவர்கள் சீற்றமடைந்து பதிலுக்கு தாக்குவார்கள்.எப்படியும் வன்முறை மூலம் வெற்றி கிடைத்த மாதிரி தோன்றினாலும் அது தற்காலிகமான வெற்றியாகத்தான் இருக்கும்.ஏனெனில் பதிலடி கொடுக்கக் காத்திருக்கும் ஒரு எதிரி உருவாகிறான்.இதற்கிடையில்,எப்படியும் பதிலடி கிடைக்கும் என்ற உள்ளுணர்வு காரணமாக மிரட்டியவன் பயந்து கொண்டே இருக்க வேண்டும்.

முல்லாவின் நாய்

0

Posted on : Friday, July 01, 2011 | By : ஜெயராஜன் | In :

முல்லாவின் நாய் பலமாகக் குரைத்துக் கொண்டிருந்தது.முல்லாவோ அதைப் பற்றி கவலைப் பட்டதாகத் தெரியவில்லை.பக்கத்து வீட்டுக்காரர் அந்த சப்த்தத்தைக் கேட்க சகிக்காமல் முல்லாவின் வீட்டிற்கு வந்து என்ன பிரச்சினை என்று பார்த்தார்.நாயின் முன்னால் அதற்கு தேவையான ரொட்டி எல்லாம் கிடந்தது.ஆனால் அந்த நாயால் அதை எடுத்து சாப்பிட முடியாத  நிலை.அருகில் சென்று பார்த்தபோதுதான் தெரிந்தது,முல்லா,நாயின் வாலில் ஒரு பெரிய கல்லைக்  கட்டியிருந்தார்.நாயால் வாலைத் தூக்க முடிய வில்லை. ''என்ன முல்லா,இப்படி செய்திருக்கிறாய்?இந்த நாய் பாவம் இல்லையா?''என்று கேட்க,முல்லா சொன்னார்,''நான் கடையில் புடலங்காய் வாங்கினேன் அது மிகவும் வளைந்திருந்தது.அது ஏன் அப்படி என்று கேட்டதற்கு கடைக்காரர்,முதலிலேயே கல்லைக் கட்டி விட்டிருந்தால் நேராக வளர்ந்திருக்கும்,அதை செய்யாதலால் இப்படி வளைந்திருக்கிறது என்றார். எனக்கு நீண்ட நாட்களாக  நாயின் வால் ஏன் வளைந்திருக்கிறது என்ற சந்தேகம் இருந்தது கடைக்காரர் அந்த சந்தேகத்தைத் தீர்த்துவிட்டார்.அதனால்தான் நாயின் வாலில் கல் கட்டினேன்.''

கண்கள் புத்துணர்வு பெற

1

Posted on : Friday, July 01, 2011 | By : ஜெயராஜன் | In :

அலுவலகத்திலிருந்து களைத்துப்போய் வீடு திரும்பினால்,நம் அசதியை மற்றவர்களுக்கு தெரிவிப்பது நம் கண்கள்தான்.கண்கள் புத்துணர்ச்சி பெற சில பயிற்சிகள்;
*விழியை உயர்த்தி மேல் நோக்கிப் பாருங்கள்.பார்த்தவாறே இருபது முறை கண்களை மூடி மூடித் திறங்கள்.அதைப்போல விழியைக் கீழ் நோக்கிப் பார்த்து இருபது முறை மூடித் திறங்கள்/.
*கண்களை மூடிக் கொள்ளுங்கள்.நிதானமாக ஐந்து வரை  எண்ணுங்கள்.கண்களைத் திறந்து கொள்ளுங்கள்.ஐந்து வரை எண்ணுங்கள்.இவ்வாறு இருபது முறை செய்யவும்.
*உள்ளங்கைகளை வைத்து கண்களை மூடி இருட்டாக்கி சில நிமிடங்கள் வைத்திருந்து பிறகு திறக்கவும்.
*கண்விழிகளை  இடது வலதாக இருபது தடவைகள் மெதுவாக சுழற்றவும்.அதுபோல வலது இடதாக இருபது முறை சுழற்றுங்கள்.
*ஒரு மேஜையின் முன் அமர்ந்து,கைகளை மேஜையின் மீது வைத்து முகத்தைக் கவிழ்த்து உள்ளங்கையில் கண்களைப் பதியுமாறு வைத்து கண்களை மூட வேண்டும்.தலையின் பாரம் முழுவதும் கையில் இருக்குமாறு கண்கள் லேசாக அழுந்துமாறு வைத்து ஐந்து நிமிடங்கள் இருக்க வேண்டும்.இவ்வாறு இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.
பயிற்சி முடிந்ததும் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள்.இப்போது கண்கள் புத்துணர்ச்சியுடன் பிரகாசிக்கும்.